கார்ப்பரேட் வரி விகிதம் 22% ஆக குறைப்பு, தொழில் நிறுவனங்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

உள்நாட்டு தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதம் 22% ஆக குறைக்கப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
 | 

கோவாவில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 37ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்து, தொழில் நிறுவனங்களுக்கான புதிய சலுகைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

அதில், உள்நாட்டு  நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி விகிதத்தை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதம் 22% ஆக குறைக்கப்படுகிறது. இந்த நிறுவனங்களுக்கான பயனுள்ள வரி விகிதம் அனைத்து கூடுதல் கட்டணம் மற்றும் செஸ் உட்பட 25.17% ஆக இருக்கும். மேட் வரி 18.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்படும். அக்டோபருக்கு பிறகு தயாரிப்புத்துறையில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு 15% மட்டுமே வரி விதிக்கப்படும்’ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மேலும், வளர்ச்சியை ஊக்குவிக்க வருமான வரியில் புதிய திருத்தங்கள் கொண்டு வந்ததாகவும், பங்குச்சந்தை மூலதனத்தை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP