கட்சிக்காக உழைத்தவர்களை காங்கிரஸ் மதிக்கவில்லை - அசோக் தன்வார் குமுறல்

காங்கிரஸ் கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் விலகுகுவதாக, ஹரியானா மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வார், சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 | 

கட்சிக்காக உழைத்தவர்களை காங்கிரஸ் மதிக்கவில்லை - அசோக் தன்வார் குமுறல்

காங்கிரஸ் கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் விலகுகுவதாக, ஹரியானா மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வார், சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மஹாராஷ்டிரம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சிக்குள்  உட்கட்சிக் குழப்பம் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அதை நிரூபிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான அசோக் தன்வார் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுலதாக, சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி, முக்கிய காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்தலில் பங்குபெற அனுமதிக்காமல், போட்டியிட விரும்புபவர்களிடம் 5 கோடி ரூபாய் விலைக்கு சீட்டுகளை விற்று வருவதாகவும், இதுவரை கட்சிக்காக உழைத்தவர்களை மதிக்கவில்லை எனவும் காங்கிரஸ் கட்சியின் மீது குற்றம் சுமத்தியிருந்தார் அசோக் தன்வார். இதன் காரணமாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, சோனியா காந்தியின் வீட்டின் முன்பு நூற்றுக்கணக்கான உறுப்பினர்களுடன் மறியலில் இவர் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதை தொடர்ந்து, தற்போது, சோனியா காந்திக்கு மூன்ற பக்க கடிதம் ஒன்றை அசோக் தன்வார் அனுப்பியுள்ளதாகவும், அதில் 17 வயதில், இவர் கட்சியில் சேர்ந்த காலம் முதல் நடந்த நிகழ்வுகளை குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஹரியானா மாநில காங்கிரஸ், தற்போது, ஹூடா காங்கிரஸாக மாறிவிட்டதாகவும், இதுவரை கட்சிக்காக உழைத்தவர்களை அங்கு யாரும் மதிப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையில், மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தேர்தல் குழு தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாகவும், பல ஆண்டுகலாக கட்சியில் இருப்பவர்களை மதிக்காமல், புதிதாக வந்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது, கட்சிக்காக உழைத்தவர்களை அவமதிக்கும் விதமாக உள்ளதாகவும், காங்கிரஸிற்கு தனது சேவை இனி தேவையில்லை என தோன்றுவதால், இந்த தேர்தலுக்கான பணிகளில் ஈடுபடபோவதில்லை எனவும் அம்மாநில கட்சித் தலைவர் சஞ்சய் நிருபம் குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP