காங்கிரசால் ஒன்றும் செய்ய முடியாது: அஜய் சௌதாலா சுளீர்!

"ஹரியானாவில் பாஜக - ஜஜக கூட்டணி 5 ஆண்டுகள் முழுதாக ஆட்சி செய்யும். மக்கள் செல்வாக்கு இல்லாத காங்கிரஸ் கட்சியினரால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது" என, அந்த மாநில துணை முதலமைச்சர் துஷ்யந்த் சௌதாலாவின் தந்தை அஜய் சௌதாலா கருத்து தெரிவித்துள்ளார்.
 | 

ஹரியானாவில் பாஜக - ஜஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. பாஜகவை சேர்ந்த மனோகர்லால் கட்டார் மீண்டும் முதலமைச்சர் ஆகியுள்ளார். ஜனநாயக ஜனதா கட்சியை சேர்ந்த துஷ்யந்த் சௌதாலா துணை முதலமைச்சர் ஆகியுள்ளார். 

இது குறித்து, காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வரும் நிலையில், துஷ்யந்தின் தந்தை அஜய், செய்தியாளர்களிடம் பேசுகையில், "என் மகன் இவ்வளவு உயர்ந்த பதவிக்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு தந்தைக்கு இதை விட வேறு என்ன வேண்டும். காங்கிரஸ் கட்சியை மக்கள் புறக்கணித்து விட்டனர். அவர்களால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. ஹரியானாவில் பாஜக - ஜஜக கூட்டணி 5 ஆண்டுகள் முழுதாக ஆட்சி செய்யும்" என அவர் கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP