தேர்தலுக்கு முன்னரே தோல்வியை ஒப்புக் கொள்கிறது காங்கிரஸ் - பட்னாவிஸ் கிண்டல்

மஹாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நேரத்தில், முக்கிய தலைவர்கள் யாரும், தேர்தல் பிரச்சாரத்தை தொடங்காத நிலையில், தேர்தலுக்கு முன்னரே தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டது காங்கிரஸ் என்று தேவேந்திர பட்னாவிஸ் கேலியாக கூறியுள்ளார்.
 | 

தேர்தலுக்கு முன்னரே தோல்வியை ஒப்புக் கொள்கிறது காங்கிரஸ் - பட்னாவிஸ் கிண்டல்

மஹாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நேரத்தில், முக்கிய தலைவர்கள் யாரும், தேர்தல் பிரச்சாரத்தை தொடங்காத நிலையில், தேர்தலுக்கு முன்னரே தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டது காங்கிரஸ் என்று தேவேந்திர பட்னாவிஸ் கேலியாக கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினரும், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சஞ்சய் நிருபம், மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தேர்தல் குழு தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாகவும், பல ஆண்டுகலாக கட்சியில் இருப்பவர்களை மதிக்காமல், புதிதாக வந்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது, கட்சிக்காக உழைத்தவர்களை அவமதிக்கும் விதமாக உள்ளதாகவும், காங்கிரஸிற்கு தனது சேவை இனி தேவையில்லை என தோன்றுவதால், இந்த தேர்தலுக்கான பணிகளில் ஈடுபடபோவதில்லை என காங்கிரஸ் கட்சியின் செயல்கள் மீது குற்றம் சுமத்தியிருந்தார்.

மகாராஷ்டிரா மட்டுமில்லாது, ஹரியானாவிலும், காங்கிரஸ் கட்சி பெரும் நெருக்கடியை சந்தித்து வந்தது.  இதற்கு சான்றாக, ஹரியானா மாநில காங்கிரஸ், தற்போது, ஹூடா காங்கிரஸாக மாறிவிட்டதாகவும், இதுவரை கட்சிக்காக உழைத்தவர்களை அங்கு யாரும் மதிப்பதில்லை எனவும் கூறி, காங்கிரஸ் கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் விலகுகுவதாக, ஹரியானா மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வார், சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் இப்படி அதிருப்தி அடைந்திருப்பது, தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு தடையாக இருக்கலாம் என கருத்து கணிப்புகள் தெரிவித்து வந்தன.

இந்நிலையில், சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் யாரும், தேர்தல் பிரச்சாரத்தை தொடங்காத நிலையில், அவர்கள், தங்களது தோல்வியை, தேர்தலுக்கு முன்னரே ஒப்புக்கொள்வதாக பாஜக கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பேச்சு அடிபட்டு வந்தது.

"மாநில தேர்தல் என்பது மிக முக்கியமான ஒன்று. அதற்கான வேலைகளில் பாஜக-சிவ சேனா கூட்டணி மும்மரமாக ஈடுபட்டு வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடமிருந்த எந்த ஒரு சத்தமும் இல்லை. தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ராகுல் காந்தி பாங்காக் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியையும் பிரச்சாரங்களில்காணமுடிவதில்லை. காங்கிரஸின் முக்கிய தலைவர்களில், சரத் பவார் மட்டும் தான் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 

காங்கிரஸ் தற்போதுள்ள நிலையில், அவர்கள் தேர்தலுக்கு முன்னரே தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டனர் என்பது மிக தெளிவாக தெரிகிறது" என்று காங்கிரஸ் கட்சியை கேலி செய்யும் விதமாக கூறியுள்ளார் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்.

Newstm.in

 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP