காங்., சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி இன்னும் உயிர்ப்போடு தான் உள்ளது: சரத்பவார்

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க தேவையான ஆதரவு தங்கள் கூட்டணிக்க உள்ளதாகவும், சுயேட்சை எம்எல்ஏக்களும் தங்களுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
 | 

காங்., சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி இன்னும் உயிர்ப்போடு தான் உள்ளது: சரத்பவார்

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க தேவையான ஆதரவு தங்கள் கூட்டணிக்க உள்ளதாகவும், சுயேட்சை எம்எல்ஏக்களும் தங்களுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். 

மும்பையில் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே,  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய சரத்பவார், மகாராஷ்டிராவில் டியரசுத் தலைவர் ஆட்சி ரத்து என்பது இன்று காலை தான் தெரிந்தது. ஆட்சியமைக்க தேவையான 170 எம்.எல்.ஏக்கள் ஆதரவு எங்களுக்கு இருந்தது. சுயேட்சை எம்.எல்.ஏக்களும் எங்களுக்கு ஆதரவு அளிக்க இருந்தனர். தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் மோசடியாக கையெழுத்து பெறப்பட்டுள்ளது. புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கு பயந்து அஜித்பவார் பாஜகவுக்கு ஆதரவு தந்தாரா என தெரியாது.

அஜித்பவாரின் முடிவு கட்சிக்கு எதிரானது, ஒழுங்கற்றது. அவர் மீது கட்சி விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும். அஜித்பவாருக்கு ஆதரவளிக்கும் எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடைச் சட்டம் பாயும். தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் பதவியிலிருந்து அஜித்பவார் நீக்கப்பட்டுள்ளார். அஜித் பவாருக்கு பதில் கட்சியின் புதிய சட்டப்பேரவை குழுதலைவர் இன்று மாலை 4 மணிக்கு தேர்வு செய்யப்படுவார். காங்கிரஸ்- சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இன்னும் உயிர்ப்போடுதான் உள்ளது. பாஜகவுடன் ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் விரும்பவில்லை. சிவசேனா தலைமையில் ஆட்சி நடக்க வேண்டும் என்பதையே தேசியவாத காங்கிரஸ் விரும்புகிறது" என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிராவில் பாஜக நடத்தும் அரசியல் விளையாட்டு இது. ஜனநாயகம் மீது பாஜக சர்ஜிக்கல் தாக்குதலை நடத்தியுள்ளது என கூறினார். 

Newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP