விடுதியில் திடீர் தீ விபத்து.. கல்லூரி மாணவிகள் 3 பேர் உடல் கருகி பலி!!

விடுதியில் திடீர் தீ விபத்து.. கல்லூரி மாணவிகள் 3 பேர் உடல் கருகி பலி!!
 | 

விடுதியில் திடீர் தீ விபத்து.. கல்லூரி மாணவிகள் 3 பேர் உடல் கருகி பலி!!

பெண்கள் விடுதியில் லேப்டாப் பயன்டுத்தியப்போது அதில் இருந்து ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்து 3 மாணவிகள் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் சண்டிகர் நகரில் செக்டார் 32 பகுதியில் 25 பேர் தங்கம் வசதி கொண்ட பெண்கள் விடுதி ஒன்று இருக்கிறது. விடுதியின் முதல் தளத்தில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மற்ற இடங்களுக்கு பரவியது. மொத்தம் 34 மாணவிகள் தங்கியருந்த நிலையில் தீவிபத்து ஏற்பட்டப்போது விடுதியில் 17 பேர் மட்டுமே தங்கியிருந்தனர். விடுதியில் தீ பரவியதை அறிந்த மாணவிகள் விரைந்து வெளியேறினர்.

விடுதியில் திடீர் தீ விபத்து.. கல்லூரி மாணவிகள் 3 பேர் உடல் கருகி பலி!!

எனினும் மேல்தளத்தில் 3 மாணவிகள் சிக்கியிருந்தனர். அவர்களை வெளியேற முடியாததால் 3 இளம்பெண்கள் தீயில் சிக்கி உயிருடன் எரிந்து பலியாகினர். மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினர், போலீசார்  காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் கூறினர். தீ விபத்தின் போது பெண் ஒருவர் முதல் தளத்தில் இருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்று உள்ளார். அவரும் படுகாயம் அடைந்துள்ளார்.

விடுதியில் திடீர் தீ விபத்து.. கல்லூரி மாணவிகள் 3 பேர் உடல் கருகி பலி!!தீயை கட்டுப்படுத்திய நிலையில் தீயில் சிக்கி உயிரிழந்தது ரியா, பன்சி மற்றும் முஸ்கான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விடுதியில் மாணவிகள் லேப்டாப் பயன்டுத்தியப்போது அதில் இருந்து ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விடுதியில் திடீர் தீ விபத்து.. கல்லூரி மாணவிகள் 3 பேர் உடல் கருகி பலி!!

எனினும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP