சீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்!!

சீனா நாட்டின் மேற்கு ஜின்ஜியாங் பகுதியில் வசித்து வரும் உய்குர் இன முஸ்லிம்கள் காரணமில்லாமல் கைது செய்யப்பட்டு முகாம்களில் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 | 

சீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்!!

சீனா நாட்டின் மேற்கு ஜின்ஜியாங் பகுதியில், உய்குர் இன முஸ்லிம்கள் காரணமில்லாமல் கைது செய்யப்பட்டு முகாம்களில் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

1949ஆம் ஆண்டு. சீனா, கிழக்கு துருக்கியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததை தொடர்ந்து, அந்நாட்டை சேர்ந்த உய்குர் இன மக்கள், சீனாவின் தன்னாட்சி நகரமான ஜின்ஜியாங்கிற்குள் வரத்தொடங்கினர். இதை தொடர்ந்து, இன்றைய ஜின்ஜியாங்கின் மக்கள் தொகையில் 45 சதவீதம் வகித்து வரும் உய்குர்களின் ஊடுருவல்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது.

இதை தொடர்ந்து எங்கே தங்களது கலாச்சாரம் அழிந்து விடுமோ என்ற பயத்தில், ஜின்ஜியாங் பிராந்திய அரசு அவர்களை கைது செய்து வருவதாக அமெரிக்கா ஏற்கனவே சீன அரசின் மீது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது. மேலும், இந்நிலை தொடர்ந்தால், சீனாவுடனான வணிகம் நிறுத்தப்படும் எனவும் விசா தடைகள் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

இந்நிலையில், தற்போது ஜின்ஜியாங்கின் மக்கள் தொகையில் 45 சதவீதம் வகித்து வரும் உய்குர் முஸ்லிம்களில் 10 லட்சம் பேருக்கும் மேல் சட்டவிரோதமாக கைது செய்து முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், தற்போதைய சீனாவின் செயலிற்கு, உய்குர் பயங்கரவாதிகளின் தாக்குதலினால் 31 சீன மக்கள் உயிரிழந்திருப்பதே காரணமாக கூறப்படுகின்றது. மனித உரிமையை விட சீன குடிமக்களின் பாதுகாப்பே முக்கியம் என்பதால், அந்நாட்டின் குடியரசுத் தலைவரின் உத்தரவை தொடர்ந்தே தற்போதைய கைதுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP