'சிதம்பர'(ம்) ரகசியம்: சி.பி.ஐ.,யிடம் சிக்கியது எப்படி?

விரக்தியின் விளிம்பிற்கு சென்ற சிதம்பரம், தன நண்பர்களுடன் நேற்று இரவு பத்திரிகையாளர்களை சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்தார். தான் எங்கும் ஓடிவிடவில்லை எனக்கூறிய அவர், பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துவிட்டு, டெல்லியில் உள்ள தன வீட்டிற்கு சென்றார்.
 | 

'சிதம்பர'(ம்) ரகசியம்: சி.பி.ஐ.,யிடம் சிக்கியது எப்படி?

மும்பையை சேர்ந்த பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜிக்கு சொந்தமான, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், வெளிநாட்டு முதலீட்டை பெற விரும்புகிறது. ஆனால் சட்ட விதிகளின்படி அந்த நிறுவனத்தால் அந்நிய முதலீட்டை பெற முடியாமல் போகவே, தங்களுக்கு உதவும்படி, இந்திராணியும் அவரது கணவரும், அப்போதைய மத்திய நிதியமைச்சர் பி.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை,கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த விஷயத்தில் சட்ட விதிகளை மீறி, அந்நிய முதலீடு வாரியத்தின் அனுமதியை பெற்றுத்தருவதாகவும், அதற்கு கைமாறாக, தனக்கு சொந்தமான நிறுவனத்தின் பெயரில் வங்கியில் பணம் செலுத்துமாறும் கார்த்தி கூறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, தன் மகனின் நிறுவனத்திற்கு பணம் பெறுவது குறித்து, சிதம்பரமே தங்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியதாக இந்திராணி தம்பதியர், சிபிஐ அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். 

அதாவது, சட்டவிரோத முறையில் பணப்பரிமாற்றம் நடந்தது தொடர்பாக, வருமானவரித்துறை அதிகாரிகள் விசரணையை துவங்கி, அதை அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் சமர்பிக்கின்றனர். 2007ல் நடந்த இந்த முறைகேடு தொடர்பாக, 2010ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்படுகிறது. 

இதையடுத்து, இந்திராணி, பீட்டர் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீதும் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. மகள் ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணியும், அவரது கணவரும் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில் ஐ என் எக்ஸ் மீடியா  வழக்கு விசாரணையில்  அப்ரூவராக மாறிய இந்திராணி, இந்த வழக்கில், சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதாக கூறினார். இதையடுத்து அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. 

இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,கார்த்தி மற்றும் சிதம்பரம் ஆகியோர் பல முறை விசாரணைக்கு ஆஜர் ஆகாமல் புறக்கணித்தனர். 

இதற்கிடையே, கார்த்தி வீட்டில் அதிரடி சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதையடுத்து, அவருக்கு சொந்தமான 54 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன. அவர் வெளி நாட்டிற்கு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

பின் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அதன் பின் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார். இதற்கிடையே, 15 மாதங்களாக தொடர்ந்து பல முறை கைதாவதிலிருந்து விலக்கு பெற்று வந்த சிதம்பரத்திற்கு, டெல்லி ஐகோர்ட், முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. 

இதையடுத்து, அவசர அவசரமாக நேற்று சிதம்பரம் மற்றும் அவரது நண்பர்களும் மூத்த வழக்கறிஞர்களுமான கபில் சிபல், சல்மான் குர்ஷித் ஆகியோர் உச்ச நீதி மன்றத்தில் முன்ஜாமீன் கோரி முறையிட்டனர்.

ஆனால், அயோத்தி வழக்கு விசாரணையில் இருந்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, சிதம்பரத்தின் மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க மறுத்துவிட்டது. இதனை அடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதி ரமணாவிடம் சிதம்பரம் தரப்பு முறையிட்டது.

முதலில் மனுவில் பிழை இருப்பதாக கூறி அதை ஏற்க மறுத்த நீதிபதி, பின் மீண்டும் சிதம்பரம் தரப்பு முறையிட்டபோது, பட்டியலிடப்படாத ,மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்றார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் கைவிரித்ததால் விரக்தி அடைந்த சிதம்பரம் தரப்பு செய்வதறியாது திகைத்தது. இதற்கிடையே, சிதம்பரம் வெளிநாட்டிற்கு தப்பி செல்லாமல் இருக்க, காலையிலேயே லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

விரக்தியின் விளிம்பிற்கு சென்ற சிதம்பரம், தன நண்பர்களுடன் நேற்று இரவு பத்திரிகையாளர்களை சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்தார். தான் எங்கும் ஓடிவிடவில்லை எனக்கூறிய அவர், பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துவிட்டு, டெல்லியில் உள்ள தன வீட்டிற்கு சென்றார்.

அவரது வீட்டு வாசலில் ஏறாளமான காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்திருந்தனர். அவரின் வீட்டின் பின் பக்கம் வாயிலாக சென்ற சிபிஐ அதிகாரிகள், சிதம்பரத்தை கைது செய்து அழைத்து சென்றனர். இன்று நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP