Logo

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு: பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் 

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
 | 

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு: பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் 

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் இவ்வாறு பதில் அளித்தார்.

மேலும், ‘2016இல் எடுக்கப்பட்ட முடிவின்படி சேலம் உருக்காலையின் 100% பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலையில் உலகளாவிய நிறுவனங்களிடம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. தனியார் துறையிடம் கிடைக்கும் முதலீடு, தொழில்நுட்பம் அதிகப்படுத்தினால் வேலைவாய்ப்பு உருவாகும். சிறு, குறு தொழிற்சாலைகல் அதிகரித்து தமிழகத்தின் திறன், வளர்ச்சி மேம்படும்’ என்றும்  பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP