குழந்தைகளை கொன்றுவிட்டு தொழிலதிபர் எடுத்த விபரீத முடிவு.. தப்பிய மனைவி..

குழந்தைகளை கொன்றுவிட்டு தொழிலதிபர் எடுத்த விபரீத முடிவு.. தப்பிய மனைவி..
 | 

குழந்தைகளை கொன்றுவிட்டு தொழிலதிபர் எடுத்த விபரீத முடிவு.. தப்பிய மனைவி..

மன அழுத்தம் காரணமாக தொழிலதிபர் ஒருவர் தனது குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் ஷாலிமார் பகுதியைச் சேர்ந்த மலானியின், காகித தொழிற்சாலை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு சில காரணங்களால் மூடப்பட்டது. தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கான முயற்சியில் மலானி ஈடுபட்டிருந்ததாக சொல்லப்படுகிறது . கடந்த 6 மாதங்களாக மலானியின் பெற்றோர்கள் ஆதரவில் அவரது குடும்பம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று மலானியின் குழந்தைகள் இருவரும் அவரது வீட்டில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

குழந்தைகளை கொன்றுவிட்டு தொழிலதிபர் எடுத்த விபரீத முடிவு.. தப்பிய மனைவி..

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மலானியின் குழந்தைகளான சமிக்சா மற்றும் ஷ்ரேயான்ஸ் ஆகியோரின் உடல்களை கைப்பற்றினர். ஆனால் மலானியை வீட்டில் காணவில்லை. மலானியின் மனைவி, தான் மார்கெட்டுக்கு சென்றிருந்ததாகவும், திரும்பி வரும்போது கணவரை காணவில்லை என்றார். இதையடுத்து மலானியை தேடி பல இடங்களுக்கு போலீசார் விரைந்தனர்.

குழந்தைகளை கொன்றுவிட்டு தொழிலதிபர் எடுத்த விபரீத முடிவு.. தப்பிய மனைவி..

ஆனால் ஹெய்டர்பூர் மெட்ரோ ரயில் நிலையப்பகுதியில் மலானி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது போலீசாருக்கு தெரிய வந்தது. மலானி தனது தொழிலை மீண்டும் தொடங்கும் முயற்சியில் இருந்த போது, வேலையின்மை மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதனாலேயே அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP