முடிந்தால் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை திரும்ப கொண்டு வாருங்கள் - ராகுல் காந்திக்கு, பிரதமர் மோடி நேரடி சவால்

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறயுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பிரதமர் மோடி, எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு, முடிந்தால் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப கொண்டு வருமாறு, நேரடி சவாலை விடுத்துள்ளார்.
 | 

முடிந்தால் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை திரும்ப கொண்டு வாருங்கள் - ராகுல் காந்திக்கு, பிரதமர் மோடி நேரடி சவால்

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறயுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பிரதமர் மோடி, எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு, முடிந்தால் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப கொண்டு வருவோம் என பிரச்சாரம் செய்யும்படி, நேரடி சவாலை விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில், வரும் அக்டோபர் 21 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இரு பெரும் கட்சிகளான, பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியும், மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. 

இந்த பிரச்சாரத்தின் போது, எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு ஒரு நேரடி சவாலை விடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு கடந்த ஆகஸ்டு 5 ஆம் தேதி திரும்ப பெற்றதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி அதற்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்து வந்த நிலையில், முடிந்தால் அம்மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கொண்டு வருவோம் என பிரச்சாரம் செய்யும்படி நேரடி சவால் விடுத்துள்ளார் மோடி. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP