மகாராஷ்டிரா ஆளுநரை தனி தனியே சந்திக்கும் பாஜக-சிவசேனா தலைவர்கள்!!

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, வெற்றி பெற்ற கூட்டணி கட்சிகளான பாஜக-சிவசேனா கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து நிலவி வரும் நிலையில், இரு கட்சி தலைவர்களும், அம்மாநில ஆளுநரை தனி தனியே சந்தித்து உரையாட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 | 

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, பாஜக-சிவசேனா கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், முதன் முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி கண்டிருக்கும் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவை முதலமைச்சராக அறிவிக்குமாறு அக்கட்சி உறுப்பினர்கள் பிடிவாதமாக உள்ளதை தொடர்ந்து, பாஜக அதற்கு மறுப்பு தெரிவித்தால் இரு கட்சிகளுக்கும் இடையே பலத்த கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

இதனிடையில், பாரதிய ஜனதா கட்சி தங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லையெனில், கூட்டணியில் இருந்து வெளிவரவும் தயங்க மாட்டோம் என்று பாஜகவிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே.

இதை தொடர்ந்து, பாஜக-சிவசேனா கட்சி தலைவர்கள் வரும் அக்டோபர் 31 அன்று சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ள உள்ள நிலையில், இரு கட்சி தலைவர்களும், மகாராஷ்டிரா மாநில ஆளுநரான பகத் சிங் கோஷ்யாரியை இன்று நேரில் சந்தித்து உரையாட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP