மகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்தித்த பாஜக-சிவசேனா தலைவர்கள்!!

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதை தொடர்ந்து, வெற்றி கூட்டணியான பாஜக-சிவசேனா கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் நிலையில், அம்மாநில ஆளுநரை சந்தித்த இரு கட்சி தலைவர்களும் தனி தனியே உரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
 | 

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த அக்டோபர் 24ஆம் தேதி வெளியிடப்பட்டதை தொடர்ந்து, பாஜக-சிவசேனா கூட்டணி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதனிடையில், முதன் முறையாக தேர்தல் களத்தை சந்தித்து வெற்றி கண்டிருக்கும் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவை முதலமைச்சராக அறிவிக்குமாறு அக்கட்சி உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், சிவசேனாவின் கூட்டணி கட்சியான பாஜக அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தது.

இரு கட்சிகளுக்கும் இடையே இத்தகைய கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து நிலவி வந்த நிலையில், இன்று பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சிவசேனாவை சேர்ந்த  அம்மாநில போக்குவரத்து அமைச்சரான திவாக்கர் ரோட்டே இருவரும், மகாராஷ்டிர மாநில ஆளுநரான பகத் சிங் கோஷ்யாரியை தினி தனியே நேரில் சந்தித்து உரையாற்றியுள்ளனர்.

ஆளுநருடனான இந்த சந்திப்புக்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்த பாஜக தலைவரான தேவேந்திர பட்னாவிஸ், முதலமைச்சர் பதவி குறித்த கலந்துரையாடல் நிச்சயமாக மேற்கொள்ளப்படும் என்று கூறினார். எனினும், ஆளுநர் உடனான சந்திப்புக்கு பின், பொதுவான சந்திப்பு தான் எனவும், குறிப்பாக எது குறித்தும் பேசவில்லை என்றும் கூறியுள்ளார் சிவசேனா கட்சி தலைவர் திவாக்கர் ரோட்டே.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP