மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைக்கப்படும் - பட்னாவிஸ் உறுதி!!

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கூட்டணி கட்சிகளாக இணைந்து போட்டியிட்ட பாஜக-சிவசேனா கட்சி வெற்றி பெற்றிருக்கும் நிலையில், சிவசேனாவை சேர்ந்த ஆதித்யா தாக்கரே தான் முதலமைச்சராக வேண்டும் என்று சிவசேனா தரப்பு பிடிவாதமாக உள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி தான் அமைக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார் தேவேந்திர பட்னாவிஸ்.
 | 

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த 24ஆம் தேதி வெளியானதை தொடர்ந்து, தேர்தல் களத்தை முதன் முதலில் சந்திக்கும் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே தான் முதலமைச்சராக வேண்டும் என்று அந்த கட்சி தரப்பில் குரல்கள் எழுப்பப்பட்டன.

அரசியல் அனுபவம் இல்லாத ஒருவரை பதவியில் அமர்த்த பாஜக தயார் இல்லாத நிலையில், கூட்டணியின் போது அளித்த உறுதியின் படி 50-50 என்ற விதியை கடைப்பிடிப்போம் என்று உத்திரவாத கடிதம் எழுதி தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே. 

இதை தொடர்ந்து, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கட்சி உறுப்பினர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ், மகாராஷ்டிரா மாநிலத்தின் தனி பெரும் கட்சி பாஜக தான். இதை யாராலும் மறுக்க இயலாது. எனவே, இம்மாநிலத்தில், பாஜக தலைமையிலான ஆட்சி தான் அமைக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை தொடர்ந்து, வரும் அக்டோபர் 31அன்று, இருகட்சிகளும் சந்திக்கவிருக்கின்ற நிலையில், என்ன முடிவு எடுக்கப்படும், மகாராஷ்டிரா மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் உலகை வியாபித்துள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP