ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல் - 81 இடங்களில் பாஜக வெற்றி!!

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறபட்டதை தொடர்ந்து, நேற்று (வியாழன்) அம்மாநிலத்தில் முதல் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், போட்டியிட்ட 280 இடங்களில், 81இடங்களில் வெற்றி பெற்றுள்ளது பாரதிய ஜனதா கட்சி.
 | 

ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல் - 81 இடங்களில் பாஜக வெற்றி!!

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறபட்டதை தொடர்ந்து, நேற்று (வியாழன்) அம்மாநிலத்தில் முதல் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், போட்டியிட்ட 280 இடங்களில், 81இடங்களில் வெற்றி பெற்றுள்ளது பாரதிய ஜனதா கட்சி.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று, அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்க, மத்திய அரசு, உத்தரவு பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, நேற்று (வியாழன்) அம்மாநிலத்தில், முதல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் போட்டியிட்ட 280 இடங்களில் 81 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதிக பாஜக ஆதரவாளர்களை கொண்ட ஜம்முவில், கடந்த 2014 ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை சேர்தலில், போட்டியிட்ட 37 இடங்களில் 25 இடங்களில் வெற்றி பெற்றிருந்த பாஜக, இந்த ஆண்டிற்கான உள்ளாட்சி தேர்தலில், மொத்தம் போட்டியிட்ட 148 இடங்களில் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையில், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்பி பெறப்பட்டதில் அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி அகிய முன்றும், தேர்தலை புறக்கணித்திருந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி தான் அம்மாநில உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட ஒரே முக்கிய அரசியல் கட்சியாகும். 

மேலும், சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறபட்டதை தொடர்ந்து, அம்மாநிலத்தில் நேற்று நடைபெற்ற முதல் உள்ளாட்சி தேர்தலில் 99.5 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக கூறியுள்ளார் மாவட்ட தேர்தல் அதிகாரி சுஷ்மா சவுகான்.

இந்திய சரித்திர்த்தில் முதன் முறையாக உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமின்றி, ஓர் தேர்தலில், ஓர் மாநிலத்தில், இத்தகைய வாக்குப் பதிவு நடைபெற்றதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP