சுயேட்சையாக போட்டியிட திட்டமிட்டிருக்கும் அதிருப்தியாளர்களிடம் பாஜக பேச்சுவார்த்தை!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் அக்டோபர் 21 அன்று மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்களாக அறிவித்த 27 பேரின் மேல் நம்பிக்கையில்லை என பாஜக - சிவ சேனா கட்சி உறுப்பினர்கள் 114 பேர் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளனர்
 | 

சுயேட்சையாக போட்டியிட திட்டமிட்டிருக்கும் அதிருப்தியாளர்களிடம் பாஜக பேச்சுவார்த்தை!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் அக்டோபர் 21 அன்று மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி 148 இடங்களிலும், சிவ சேனா கட்சி 126 இடங்களிலும் போட்டியிட போவதாக முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்களாக அறிவித்த 27 பேரின் மேல் நம்பிக்கையில்லை என பாஜக - சிவ சேனா கட்சி உறுப்பினர்கள் 114 பேர் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளனர். கூட்டணி கட்சிகளாக இருந்து வரும் பாஜக - சிவ சேனா கட்சி அவர்களிடம் சமாதானம் பேச முயற்சித்து வருகிறது.

ஆளுங்கட்சி மட்டுமில்லாமல், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கும் இந்நிலை ஏற்பட்டுள்ளது. போர்பந்தர் சட்டப்பேரவையில், காங்கிரஸ் கட்சி பரத் பால்கேவை வேட்பாளராக அறிவித்திருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவாஜிராவ் கலுங்கே, தனித்து போட்டியிட போவதாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 

ஷிரோல் நகரில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி, அணில் மாலிக்கிற்கு ஆதரவு அளிக்கும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் ராஜேந்திர படில் யாத்ரவ்கர், சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

வேட்புமனு தாக்கலை திரும்ப பெற, இன்றே (திங்கட்கிழமை) இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, இன்னும் சில மணி நேரங்களே மீதமுள்ள  நிலையில், அனைத்து கட்சிகளும்,  சுயேட்சையாக போட்டியிடவுள்ளவர்களுடன் தீவிரப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP