மத்திய அரசின் ஆட்சியை திணிக்க முயற்சிக்கிறது பாஜக : சிவசேனா குற்றச்சாட்டு!!!

மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, வெற்றி கூட்டணியான பாஜக-சிவசேனா கட்சிகளிடையே பெரும் கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், மகாராஷ்டிராவில் மாநில ஆட்சி அமைப்பை தடுக்க முயலும் பாஜக, மத்திய அரசின் ஆட்சியை திணிக்க முயல்வதாக குற்றம் சுமத்தியுள்ளது சிவசேனா.
 | 

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் பதவியில் 50-50 விதியை பின்பற்ற வேண்டும் பாரதிய ஜனதா கட்சி என்று பிடிவாதமாக இருந்து வரும் பாஜகவின் கூட்டணியான சிவசேனா, அதன் பத்திரிகையான சாம்னாவில், பாஜக குறித்த சாட்டுகளை தொடர்ந்து முன் வைத்து வருகின்றது.

இந்நிலையில், "மகாராஷ்டிரா மாநிலத்தில், மத்திய அரசின் ஆட்சியை கொண்டு வர பாஜக முயற்சிப்பதால் தான், மாநில ஆட்சி அமைப்பது தாமதமாகிறது", என்ற ஓர் புது குற்றச்சாட்டை தற்போது முன் வைத்துள்ளது சிவசேனா கட்சி.

சிவசேனாவின் குற்றச்சாட்டுகள் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்கும் போது, டெல்லியில் இருந்து மகாராஷ்டிரா திரும்பியுள்ள பாஜக தலைவரான தேவேந்திர பட்னாவிஸ், பாஜகவின் கருத்துக்களுக்கு சிவசேனா விரைவில் ஒப்புதல் அளிக்கும் எனவும், அம்மாநிலத்தில் இன்னும் சில தினங்களில் ஆட்சி அமைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து, வரும் நவம்பர் 7 ஆம் தேதியுடன் தற்போதைய ஆட்சி முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், பாஜக-சிவசேனாவின் நிலைபாடு என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள அம்மாநில அரசியல் உலகம் ஓர் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP