Logo

சஞ்சய் ராவுத்தின் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு பாஜக பதிலடி!!!

மகாராஷ்டிரா மாநில ஆட்சி அமைப்பு குறித்த விவகாரங்களை தொடர்ந்து, ஆட்சி அமைப்பது மட்டுமே பாஜகவின் நோக்கம் என்னும் நிலையில், விரைவில் ஆட்சியிலிருந்து பதவி விலகப்போகும் அவர்களுக்கும் பைத்தியம் பிடிக்கும் என்று கூறியிருந்த சிவசேனா தலைவர் சஞ்சய் ராவுத்தின் கருத்துக்களுக்கு பதிலளித்துள்ளது பாரதிய ஜனதா கட்சி.
 | 

சஞ்சய் ராவுத்தின் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு பாஜக பதிலடி!!!

மகாராஷ்டிரா மாநில ஆட்சி அமைப்பு குறித்த விவகாரங்களை தொடர்ந்து, ஆட்சி அமைப்பது மட்டுமே பாஜகவின் நோக்கம் என்னும் நிலையில், விரைவில் ஆட்சியிலிருந்து பதவி விலகப்போகும் அவர்களுக்கும் பைத்தியம் பிடிக்கும் என்று கூறியிருந்த சிவசேனா தலைவர் சஞ்சய் ராவுத்தின் கருத்துக்களுக்கு பதிலளித்துள்ளது பாரதிய ஜனதா கட்சி.

மகாராஷ்டிராவில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாருடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது பாஜக. கடந்த சனிக்கிழமை காலை ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி முன்னிலையில் பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராகவும், என்யசியபி தலைவர் அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர். 

பாஜகவின் இந்த திடீர் முடிவினால் அம்மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்த கனவுடன் இருந்த சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியான மஹா விகாஸ் அகாதி ஏமாற்றமடைந்ததை தொடர்ந்து, பாஜகவிற்கு எதிராகவும், அம்மாநில ஆளுநருக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தனர். மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பு வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அவர்கள் முன்வைத்தனர். இந்த மனுவினை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாளை தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா கட்சி ஆலோசகர், நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயமாக பாஜக தோல்வியை தழுவும் என்றும், பதவியில்லாமல் அவர்களால் இருக்க முடியாத நிலையில் பைத்தியம் பிடித்துப் போகும் என்றும் கூறியுள்ளார். மேலும், பாஜகவை வெகுவாக சீண்டும் வகையில், அப்படி பைத்தியம் பிடித்து சுத்தும் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மகாராஷ்டிராவில் இன்னும் சில மருத்துவமனைகள் தொடங்க சிவசேனா உத்தரவு பிறப்பிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடக்கம் தொட்டே பாஜகவை சீண்டி வருவதையே மும்முதல் தொழிலாக செய்து வரும் இவர், தற்போது இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் முன் வைத்துள்ளார். இவரின் எந்த கருத்துக்களும் செவி சாய்காத பாஜக தரப்பினர், இவரின் தற்போதைய கருத்துக்கு பதிலாக, 170 எம்.எல்.ஏக்களின் ஆதரவை கொண்டிருக்கும் நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவது தங்களுக்கு ஓர் விஷயமே இல்லை என்றும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியது யார் என்பது விரைவில் தெரிய வரும் என்றும் கூறியுள்ளனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP