அமலாக்கத்துறையை வைத்து உறுப்பினர் சேர்க்கையை நடத்தும் பாஜக: திமுக எம்.பி

பாஜகவினர் மட்டுமே அமலாக்கத்துறையை வைத்து உறுப்பினர் சேர்க்கையை நடத்துவதாக திமுக எம்.பி டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
 | 

அமலாக்கத்துறையை வைத்து உறுப்பினர் சேர்க்கையை நடத்தும் பாஜக: திமுக எம்.பி

பாஜகவினர் மட்டுமே அமலாக்கத்துறையை வைத்து உறுப்பினர் சேர்க்கையை நடத்துவதாக திமுக எம்.பி டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில், மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி  டி.கே.எஸ் இளங்கோவன், "அரசுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் மீது சிபிஐ அல்லது அமலாக்கத்துறை அதிகாரிகள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற கட்சிகளெல்லாம் மக்களுடன் நேரடியாக சென்று உறுப்பினர் சேர்க்கையை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், பாஜகவினர் மட்டும் தான் அமலாக்கத்துறையை வைத்து உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகின்றனர்" என்று தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP