Logo

50-50 விதியை கடைப்பிடிக்க வேண்டும் பாஜக - சிவசேனா எச்சரிக்கை!!

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, கூட்டணியாக இணைந்து போட்டியிட்ட பாஜக-சிவசேனா கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிறைந்து, ஓர் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.
 | 

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, பாஜக-சிவசேனா கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், முதன் முறையாக தேர்தல் களத்தில் கால் பதித்திருக்கும் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே, தான் போட்டியிட்ட வார்லி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து, அவரை முதலமைச்சராக அறிவிக்குமாறு சிவசேனா கட்சி எம்.எல்.ஏக்கள் குரல் எழுப்பி வந்தனர். 

முன் அனுபவம் இல்லாத ஒருவரை முதலமைச்சர் பதவியில் அமர்த்த மறுப்பு தெரிவித்த பாஜக, அதன் முடிவை ஏற்கனவே பல முறை கூறிவிட்டதை தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சி எங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை எனில் கூட்டணியில் இருந்து விலகவும் தயங்க மாட்டோம் என்ற எச்சரிக்கை விடுத்திருந்த சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, கூட்டணி அமைக்கும் போது உறுதியளித்த 50-50 என்ற விதியை பாஜக மறக்காமல் இருப்பது தான் நல்லது என்றும், அதை கடைபிடிப்போம் என்று ஓர் உத்திரவாத கடிதம் வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP