தேர்தல் பிரச்சாரங்களின் இறுதி நாட்களில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள்

ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதி நாள் தேர்தல் பிரச்சாரம், வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஜாட் இன மக்கள் அதிகம் காணப்படும் ஹிஸார் நகரத்தில் உரையாற்றவிருக்கிறார் பிரதமர் மோடி.
 | 

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் வரும் அக்டோபர் 21 ஆம் தேதியன்று, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முக்கிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள், தேர்தல் பிரச்சாரத்தில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

தேர்தல் பிரச்சாரங்களுக்கான கடைசி நாளாக அக்டோபர் 19 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து, வரும் அக்டோபர் 18 அன்று, ஹரியானா மாநிலத்தில், ஜாட் இன மக்கள் அதிகம் காணப்படும் சார்க்கி தாத்ரி மற்றும் குருக்ஷேத்திரா ஆகிய இடங்களில்,  தேர்தலுக்கான இறுதி நாள் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார் பிரதமர் மோடி. 

அதே தினத்தன்று, மகாராஷ்டிரா மாநிலம் வர்தா மற்றும் யாவத்மால் நகரங்களில் எதிர்கட்சியான காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தியும் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஹரியானா மாநிலம் பாலப்கார்ஹ் நகரில், ஏற்கனவே 4 பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்த பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை, ஜம்மு காஷ்மீர் விவகாரம், ரஃபேல் போர் விமானம், தேஜாஸ் போர் விமானம் போன்ற பல கேள்வி அம்புகளால் சராமாரியாக தாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில், அக்டோபர் 21 அன்று நடைபெறவுள்ள தேர்தலுக்கான முடிவுகள் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP