பருவநிலை மாற்றத்தால் பாடாய்படும் பீகார்: நிதிஷ் குமார் வேதனை 

பருவநிலை மாற்றத்தால், பீகாரில் கடும் வறட்சியும் அதை தொடர்ந்து கனமழை, வெள்ளமும் ஏற்பட்டதால், பொதுமக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக, அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் வேதனை தெரிவித்துள்ளார்.
 | 

பாட்னாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் நிதிஷ்குமார்,"பருவநிலை மாற்றத்தால் பூமியில் திடீர் மாற்றங்கள் நிகழ்கின்றன. சில மாதங்களுக்கு முன், பீகாரில் கடும் வறட்சி நிலவியது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 

இந்நிலையில், தற்போது பெய்த கனமழையால் மாநிலம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கங்கையிலிருந்து வரும் வெல்ல நீரால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. திடீர் பருவநிலை மாற்றத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பருவநிலை சீர்கேட்டை தவிர்க்க நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்" என அவர் பேசினார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP