பெண் குழந்தைகளை கொண்டாட  “பாரத் கி லட்சுமி”: பிரதமர் அழைப்பு 

பெண் குழந்தைகளை கொண்டாட “பாரத் கி லட்சுமி” என்ற புதிய முயற்சியை தொடங்க வாருங்கள் என்று, “மன் கி பாத்” நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
 | 

“மன் கி பாத்” நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, முதலில், நவராத்திரி பண்டிகையையொட்டி இந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, தங்களுடைய படிப்பு தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்படி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர், மாணவர்களின் அனுபவங்கள் அடிப்படையில்  “எக்ஸாம் வாரியர்ஸ்” புத்தகத்தின் அடுத்த பதிப்பை எழுத முற்படுவேன் என்றும் கூறினார்.

மேலும், பெண் குழந்தைகளை கொண்டாட “பாரத் கி லட்சுமி” என்ற புதிய முயற்சியை தொடங்க வாருங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். பெண்களின் சாதனைகளை #BharatKiLakshmi என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டும் என்றும், பெண்கள் திறமை, வலிமையை நாரி சக்தி என்ற பெயரில் கொண்டாடுவோம் என்றும்  “மன் கி பாத்” நிகழ்ச்சியில் உரையாற்றியபோது, பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு கூறியுள்ளார்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP