காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..

காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. தம்பதியரின் மனதை உலுக்கும் காதல் கதை..
 | 

காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..

கேரள மாநிலம் திருச்சூரில் வசித்து வந்தனர்  ஸ்னிஜோ ஜோஸ் - அனு தம்பதியர். கடந்த மாதம் திருமணம் முடிந்து பல்வேறு நகரங்களுக்கும், நாடுகளுக்கும் தேனிலவு சென்றுவிட்டு வந்தனர். இந்நிலையில் கணவரை பிரிந்து அனு பெங்களூரில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கணவர் ஜோஸ் கத்தார் நாட்டிற்கு பணிக்கு செல்வதால் அவரை வழி அனுப்ப பெங்களூருவில் இருந்து அனு விடுப்பு எடுத்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். தமது மனைவி அனுவின் வருகையை எதிர்பார்த்து பேருந்து நிலையத்தில் காத்து கொண்டிருந்தார் ஜோஸ். இதனிடையே பேருந்து வந்துசேரும் நேரத்தையும் தாண்டி காத்திருந்த ஜோஸ், மனைவியின் மொபைலுக்கு அழைப்பு விடுத்தார்.

காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..

ஆனால் அவரது செல்போனை எடுத்துப் பேசியவர் தெரிவித்த தகவல் அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவினாசியில் தனியார் பேருந்துடன் கண்டெய்னர் லாரி ஒன்று மோதிய விபத்தில், அதில் பயணம் செய்த அனு உள்ளிட்ட 19 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அனு பெங்களூருவில் பணிபுரிந்து வருவதால், திருச்சூரில் இருக்கும் கணவரை பார்ப்பதற்கு சம்பவதினத்தன்று அந்த பேருந்தில் திரும்பியுள்ளார்.

காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..

இதனிடையே பேருந்து விபத்து தொடர்பாக தகவலறிந்து உடனடியாக அவினாசிக்கு ஜோஸ் விரைந்து சென்றுள்ளார். மனைவியின் சடலத்தை பார்த்த கணவர் ஸ்னிஜோ கதறி அழுதுள்ளார். இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் கண்கலங்கி விட்டனர். கத்தாரில் வேலை பார்த்து வரும் கணவர் ஜோஸ்வை வழியனுப்பி வைப்பதற்காக மனைவி அனு, பெங்களூருவில் இருந்து திருச்சூருக்கு திரும்பியுள்ளார். ஆனால் கணவரை இறுதியாக ஒருமுறை பார்க்காமலையே விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP