Logo

பிரதமர் நரேந்திர மோடியால் கவரப்பட்டு பாஜகவில் இணைந்த விளையாட்டு வீரர்கள்

இந்திய மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் மற்றும் முன்னாள் இந்திய ஹாக்கி அணி கேப்டன் சந்தீப் சிங் பாஜகவில் இணைந்தனர்.
 | 

பிரதமர் நரேந்திர மோடியால் கவரப்பட்டு பாஜகவில் இணைந்த விளையாட்டு வீரர்கள்

இந்திய மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் மற்றும் முன்னாள் இந்திய ஹாக்கி அணி கேப்டன் சந்தீப் சிங் பாஜகவில் இணைந்தனர்.

டெல்லியில் ஹரியானா பாஜக தலைவர் சுபாஷ் பர்லா முன்னிலையில், ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், முன்னாள் இந்திய ஹாக்கி அணி கேப்டன் சந்தீப் சிங் ஆகியோர் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடியால் ஈர்க்கப்பட்டு, தான் அரசியலில் சேர்ந்துள்ளதாகவும், அவரது நேர்மையை பார்த்து தான் கட்சியில் இணைந்துள்ளதாகவும்  இந்திய ஹாக்கி அணி கேப்டன் சந்தீப் சிங் தெரிவித்துள்ளார். 

மேலும், ’பிரதமர் மற்றும் ஹரியானா முதலமைச்சர் இருவரும் இளைஞர்களுக்காக நிறைய செய்கிறார்கள். கட்சி என்னை தேர்தலில் போட்டியிடும் திறன் கொண்டதாக கருதினால், நான் நிச்சயமாக போட்டியிடுவேன்’ என்றார்.

பிரதமர் நரேந்திர மோடியால் கவரப்பட்டு பாஜகவில் இணைந்த விளையாட்டு வீரர்கள்

பாஜகவில் இணைந்தது குறித்து மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் கூறுகையில், ‘ஒரு இளைஞனாக நான் தேசத்திற்காக உழைக்க விரும்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடி, ஜம்மு-காஷ்மீருக்கான 370ஆவது பிரிவை ரத்து செய்து, சாத்தியமற்றதை அடைந்தார். இதன் பின்னர் நாடு மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP