மன்மோகன் சிங்கின் ஆட்சிபோல், தற்போதைய ஆட்சியில் ஊழல் மோசடிகள் நடைபெறவில்லை: விலாசிய நிம்மி!!!

முந்தைய அரசுகளை குற்றம் சாட்டுவதில் மத்திய அரசு மும்மரமாக உள்ளதாக குறிப்பிட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-ன் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் தக்க பதிலடி கொடுத்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
 | 

மன்மோகன் சிங்கின் ஆட்சிபோல், தற்போதைய ஆட்சியில் ஊழல் மோசடிகள் நடைபெறவில்லை: விலாசிய நிம்மி!!!

முந்தைய அரசுகளை குற்றம் சாட்டுவதில் மத்திய அரசு மும்மரமாக உள்ளதாக குறிப்பிட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-ன் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் தக்க பதிலடி கொடுத்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 

சில தினங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைகழகத்தில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மன்மோகன் சிங் மற்றும் ரகுராம் ராஜன் இருவரும் பொது வங்கிகளின் சீரற்ற நிலைக்கு காரணம் என குறிப்பிட்டிருந்தார்.  

இவரின் இந்த கருத்துக்கு, உள்நாட்டு விவகாரத்தை எதற்காக சர்வதேச இடத்தில் குறிப்பிட வேண்டும் என்று பலரும் கேள்வியெழுப்பி வந்த நிலையில், அதற்கு பதிலளித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அரசு முந்தைய அரசுகளை குற்றம் சாட்டுவதில் தான் மும்மரமாக உள்ளதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், பத்திரிக்கையாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "மன்மோகன் சிங்-ன் கருத்துக்களை நான் மறுக்கவில்லை. எனினும், ஓர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென்றால், அது எப்போது எதனால் ஏற்பட்டது என்பதை குறித்து ஆராய்வதும் முக்கியம். அப்போது தான் பிரச்சனைக்கான சரியான தீர்வை நம்மால் கண்டுபிடிக்க முடியும்.

நான் உள்நாட்டு கருத்துக்களை வெளிநாட்டில் பேசியதற்கு பலரும் அதிருப்தியடைந்திருப்பர் என்பது எனக்கு தெரியும். எனினும் பேச வேண்டிய நிலை வரும் பொழுது பேசாமல் அமைதி காப்பதற்கு பதில் உண்மைகளை கூறுவதில் தவறில்லை என்பதே எனது கருத்து. 

மத்திய அரசுக்கு யார் மீதும் குற்றம் சுமத்த வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், தற்போதைய ஆட்சியில் எந்த மோசடிகளும் நடைபெறவில்லை. இதற்கு மக்களே சாட்சி" என்று கூறியுள்ளார்.

இவ்வாறு இருவருக்குமிடையே நடைபெறும் இந்த காரசாரமான விவாதத்தில், தற்போது மன்மோகன் அவர்களது கருத்து என்னவாக இருக்கும் என்பதை அரிய  அனைவரும் ஆர்வத்துடன் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP