அருண் ஜெட்லி மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு: அமித்ஷா

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண்ஜெட்லி மறைவு தனக்கு தனிப்பட்ட இழப்பு என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
 | 

அருண் ஜெட்லி மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு: அமித்ஷா

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண்ஜெட்லி மறைவு தனக்கு தனிப்பட்ட இழப்பு என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி இன்று நண்பகல் காலமானார். அவரது மறைவு ஆழ்ந்த வேதனையளிப்பதாகவும், தனிப்பட்ட இழப்பு எனவும் கூறியுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா கட்சியின் மூத்த தலைவரை மட்டுமல்லாமல், ஒரு முக்கியமான குடும்ப உறுப்பினரையும் இழந்துவிட்டேன் என கூறியுள்ளார். மேலும் அவர் எப்போதும் தனக்கு வழிகாட்டும் ஒளியாக இருப்பார் என அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். 

மேலும், அருண் ஜெட்லி மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக முதலமைச்சர் பழனிசாமி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP