அரசியல் வாழ்வில் அஞ்சா நெஞ்சர் அருண் ஜெட்லி!

முன்னாள் மத்திய நிதியமைச்சர், ராஜ்யசபா எம்பி, பாஜகவின் மூத்த தலைவர், நம்மில் பலருக்கும் அருண் ஜேடலியை பற்றி இவ்வளவுதான் தெரியும். கல்லூரி காலம் முதல் தன கடேசு மூச்சு நிற்கும் வரை அரசியல் அரங்கிலும் பொது வாழ்விலும் அவர் ஓர் மிகப்பெரும் போராளியாக இருந்துள்ளார் என்பது பலரும் அறியாத உண்மை.
 | 

அரசியல் வாழ்வில் அஞ்சா நெஞ்சர் அருண் ஜெட்லி!

முன்னாள் மத்திய நிதியமைச்சர், ராஜ்யசபா எம்பி, பாஜகவின் மூத்த தலைவர், நம்மில் பலருக்கும் அருண் ஜேடலியை பற்றி இவ்வளவுதான் தெரியும். கல்லூரி காலம் முதல்தன் கடைசி மூச்சு நிற்கும் வரை அரசியல் அரங்கிலும் பொது வாழ்விலும் அவர் ஓர் மிகப்பெரும் போராளியாக இருந்துள்ளார் என்பது பலரும் அறியாத உண்மை. 

ஆம் 1952ம் ஆண்டு டிசம்பர் 28ல் பிறந்த அருண் ஜெட்லி, டெல்லியில் பள்ளி படிப்பை முடித்தார். பின் அங்குள்ள ஸ்ரீ ராம் கல்லூரியில் பிகாம் படித்த அவர், அதன் பின் சட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றார். கல்லூரி காலங்களிலேயே ஜேபி நாராயண் போன்ற தலைசிறந்த தலைவர்களால் ஈர்க்கப்பட்டு, அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டினார். 

விளைவு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் தலைவராகவும் டெல்லி பல்கலைகழகத்தில் மாணவர் தலைவராகவும் விளங்கினார். கல்லூரி காலங்களில் யாருக்கும் அஞ்சாத சிங்கம் போல் பீடு நடை போட்டார். இவரின் துணிச்சலான செயல்பாடுகள் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தன. 

முன்னாள் பிரதமர் இந்திராவின் ஆட்சி காலத்தில் நாடெங்கும் எமெர்ஜென்சி அமல்படுத்தப்பட்டபோது, 19 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்ததும், தீவிர அரசியலில் ஈடுபட துவங்கினார். 

சட்ட நுணுக்கங்களை நன்கு கற்றுணர்ந்த அவர், பல உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக வாதாடினார். 

ஜனதா கட்சியில் சேர்ந்த இவர், பொது வாழ்வில் மெல்ல மெல்ல மிளரத்துவங்கினார். மிக இளம் வயதிலேயே பல முக்கிய பதவிகளும், பொறுப்புகளும் இவரை தேடி வந்த போதும், சீனியர்களுக்கு வழிவிட்டு யாரையும் கவிழ்க்காமல் நேர்மையான பாதையில் நிதானமாக பயணித்தார். 

இன்னும் அவர் வகித்த பதவிகள், அவரின் அரசியல் பயணம் குறித்து அடுத்த கட்டுரையில் விரிவாக காணலாம். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP