நவீன இந்தியாவின் சாணக்கியர் என்று நிரூபித்த அமித் ஷா!!!

மகாராஷ்டிரா : கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிப்பதில் மும்மரமாக ஈடுபட்டு வந்த சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் ஆகியோருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று காலை ஆளுநர் மாளிகையில் வைத்து பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராகவும், தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர். அவர்களுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவி பிரமானம் செய்து வைத்துள்ளார்.
 | 

நவீன இந்தியாவின் சாணக்கியர் என்று நிரூபித்த அமித் ஷா!!!

மகாராஷ்டிரா : கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிப்பதில் மும்மரமாக ஈடுபட்டு வந்த சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் ஆகியோருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று காலை ஆளுநர் மாளிகையில் வைத்து பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராகவும், தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர். அவர்களுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவி பிரமானம் செய்து வைத்துள்ளார்.

நேற்று வரை ஆட்சி அமைக்க போவது நாங்கள் தான், முதலமைச்சராக போவது உத்தவ் தான் என்று கூறி வந்த முக்கட்சிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது ஃபட்னாவிஸின் பதவி பிரமாணம். சரி அவரை கூட விடுங்கள் ஏற்கனவே முதலமைச்சராக இருந்துள்ளார் என்பதால் சகித்து கொள்ளலாம் என்றால், தலையில் குண்டு விழும் அளவு முக்கட்சி தலைவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது அஜித் பவாரின் பாஜக ஆதரவு.

இது எப்படி சாத்தியமாகும். நேற்று இரவு வரை தேசியவாத காங்கிரஸ் கட்சி சிவசேனாவுக்கு தானே ஆதரவு அளித்தது. எப்படி திடீர் திருப்பமாக அஜித் பவார் பாஜகவுடன் இணைந்தார் என்றால் அதற்கு ஒரே காரணம் உள்துறை அமைச்சர் அமித் ஷாவாகதான் இருக்க முடியும். நவீன இந்தியாவின் சாணக்கியர் என்று சும்மாவா சொல்கிறார்கள் அவரை. அவரின் சாணக்கிய தனத்தால் முக்கட்சி தலைவர்களையும் விக்கித்து நிற்க வைத்துவிட்டார்.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 145 எம்.எல்.ஏக்களின் ஆதரவு வேண்டும் என்னும் நிலையில், 105 எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்றிருந்த பாஜக, நேற்றைய ஒரே இரவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 54 எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்து பதவியில் அமர்ந்து விட்டது. இதில் சரத் பவாருக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அஜித் பவார் பாஜகவுக்கு ஆதரவு அளித்து, அவர்களுடன் இணைந்து துணை முதல்வர் ஆகி விட்டார். ஆனால், அஜித் பவாரின் பதிவியேற்பிற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும், தான் ஆதரவு அளித்தது சிவசேனாவிற்கு தான் என்றும், அஜித்தின் இந்த முடிவு தனக்கே அதிர்ச்சியாக தான் இருக்கிறது என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் சரத் பவார். 

இத்தனை நடந்துள்ளது, இது எதுவுமே தெரியாமல் நேற்று இரவு வரை ஆட்சி அமைப்பது குறித்த நினைப்பில் இருந்துள்ளனர் முக்கட்சி தலைவர்களும். என்ன ஒரு வேடிக்கை இது. மகாராஷ்டிராவில் சிவசேனா 5 வருடம் ஆட்சி அமைப்பதற்கு இனி யாரிடமும் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியிருந்த சிவசேனா தலைவர் சஞ்சய் ராவுத்திற்கு இது ஓர் மிகபெரும் அடி என்றே கூற வேண்டும். 

ஆட்சி அமைப்பது சிவசேனாவாக இருக்க வேண்டுமே தவிர, தனக்கு பதவி ஆசை இல்லை என்று கூறி வந்த உத்தவ் தாக்கரே நிச்சயமாக குழம்பிதான் போயிருப்பார். சும்மா இருந்த அவரை முதலமைச்சர் பதவியில் அமருமாறு அனைவரும் கூறினர். ஆனால் இப்போது, ஆசை காட்டி மோசம் செய்து விட்ட நிலை ஆகி விட்டது அவருக்கு. இப்படி ஓர் திட்டம் இருந்ததால் தானோ என்னவோ நேற்று இரவு வரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்துள்ளனர் பாஜகவின் முக்கிய தலைவர்கள். 

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கிரிக்கெடையும் அரசியலையும் ஒப்பிட்டு பேசும் போதே யூகித்திருக்க வேண்டும். அதை விட, மகாராஷ்டிராவில் பாஜகவின் ஆட்சி தான் அமைக்கப்படும் என்று அமித் ஷா கூறியதாக ராம்தாஸ் கூறிய போதும் அதை பெரிது படுத்தாமல் இருந்துவிட்டனர் முக்கட்சி தலைவர்களும். பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்திருந்தால், தன்னுடைய கொள்கைகளை கைவிட்டு, மற்ற இரு கட்சிகளின் பேச்சை கேட்டு பொதுவான குறைந்தபட்ச திட்டத்தை வரையறுக்க வேண்டிய நிலை சிவசேனாவிற்கு வந்திருக்காது. இப்போது எதுவுமே இல்லாமல் உள்ளதும் போச்சு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது சிவசேனா.

மகாராஷ்டிரா, இந்திய மாநிலங்களில் முக்கியமான ஓர் மாநிலம், தனித்துவமான கொள்கைகளையும், கலாச்சார பண்பாடுகளையும் கொண்டிருக்கும் அம்மாநிலத்தில், தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையிலும், மற்ற கட்சிகளை ஆட்சியில் அமரவிட்டு வேடிக்கை பார்ப்பரா பாஜகவினர். ஆனால், 4 வருடம் முதலமைச்சர் பதவியில் அமர்ந்திருந்துள்ள ஒருவரை பின்தள்ளி ஆட்சியை பிடித்தோடு மட்டுமில்லாமல், அவருக்கு தெரியாமலேயே அவரது கட்சி எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்றிருக்கிறது பாஜக.

இத்தனை காரியங்களையும் எந்த சத்தமும் இல்லாமல் மிக தெளிவாக செய்து முடித்துள்ள மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷா, நவீன இந்தியாவின் சாணக்கியர் என்பதை நிரூபித்திருக்கிறார் என்பதே உண்மை. 

Newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP