பாஜகவுடன் இணைவது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு - சரத் பவார் விளக்கம்!!!

மகாராஷ்டிரா - பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், அவரின் முடிவிற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும், மற்றவர்களை போல தனக்கும் இது அதிர்ச்சியான விஷயம் தான் என்றும் கூறியுள்ளார் என்.சி.பி கட்சி தலைவரான சரத் பவார்.
 | 

பாஜகவுடன் இணைவது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு - சரத் பவார் விளக்கம்!!!

மகாராஷ்டிரா - பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், அவரின் முடிவிற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும், மற்றவர்களை போல தனக்கும் இது அதிர்ச்சியான விஷயம் தான் என்றும் கூறியுள்ளார் என்.சி.பி கட்சி தலைவரான சரத் பவார்.

சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி சுமார் 1 மாத காலம் முடிவடைந்துள்ள நிலையில், அம்மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் பலத்த கருத்து வேற்பாடுகளும், போட்டிகளும் நிலவி வந்தன. வெற்றி கூட்டணிகளிடையே பிளவு, முற்றிலும் மாறுபட்ட சித்தாந்தங்களையும், கொள்கைகளையும் கொண்டிருந்த சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் இணைப்பு என அனைத்து வகையான திடீர் திருப்பங்களையும் கடந்த சில நாட்களுக்குள் சந்தித்து மகாராஷ்டிரா.

அம்மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்து நீண்ட நாள் கலந்துரையாடல் மற்றும் ஆலோசனைகளுக்கு பிறகு, சிவசேனா,  காங்கிரஸ், என்.சி.பி கூட்டணியான மஹா விகாஸ் அகாதி  ஓர் முடிவிற்கு வந்ததுடன், மறுநாள் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சி அமைப்பது குறித்து அறிவிக்கவிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமையன்று சத்தமே இல்லாமல், என்.சி.பி தலைவர் சரத் பவாரின் உறவினரான அஜித் பவாருடன் இணைந்து, ஆளுநர் முன்னிலையில் பதவியேற்று ஆட்சி அமைத்து விட்டது பாரதிய ஜனதா கட்சி.

இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது மஹா விகாஸ் அகாதி கூட்டணி. இந்த வழக்கிற்கான விசாரணையில் கடந்த இருநாட்களாக ஈடுபட்டிருந்த உச்ச நீதிமன்றம், இதற்கான தீர்ப்பை நாளை வழங்கவுள்ளது.

இந்நிலையில், அஜித் பவாரின் திடீர் பாஜக ஆதரவில், என்.சி.பி தலைவர் சரத் பவாருக்கும் பங்கு இருக்குமோ என்ற சந்தேகம் பலரது மனதிலும் எழுந்துள்ளது. இதற்கான இல்லை என்ற பதிலை அவர் முன்வைத்திருந்த நிலையிலும் அதை ஏற்காது பலரும் அவர் மீது தொடர் சந்தேக கேள்விகளை முன் வைக்கின்றனர். 

இதை தொடர்ந்து அதற்கு பதிலளித்த அவர், இதுபோன்ற நிகழ்வுகள் தனக்கு புதிதில்லை என்றும், தனது 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் இது போன்ற பலவற்றை சந்தித்துள்ளதாகவும் கூறியுள்ளார். பாஜகவிற்கு ஆதரவளித்து அதனுடன் இணைந்தது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு என்று கூறிய அவர், மக்களின் ஆதரவு தங்களது கூட்டணிக்கு இருக்கும் பட்சத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பில் மஹா விகாஸ் அகாதி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போவதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும், தன்னையும் தனது கட்சியையும் கடைசி நேரத்தில் முதுகில் குத்தி விட்ட சென்ற பிறகு அஜித் பவாரிடம் எந்த பேச்சு வார்த்தையும் மேற்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP