ஆதித்யாவை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் - சிவசேனா எம்.எல்.ஏக்கள் பிடிவாதம்!!

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, கூட்டணி கட்சிகளாக இணைந்து போட்டியிட்ட பாஜக-சிவசேனா கட்சி வெற்றி பெற்றிருக்கும் நிலையில், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளனர் அக்கட்சி எம்.எல்.ஏக்கள்.
 | 

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த 24ஆம் தேதி வெளியானதை தொடர்ந்து, பாஜக-சிவசேனா கட்சி வெற்றி பெற்றதோடில்லாமல், முதன் முறையாக தேர்தல் களத்தை சந்தித்திருக்கும் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே, போட்டியிட்ட வார்லி தொகுதியில் வெற்றி பெற்றிருப்பதை தொடர்ந்து, அவரை முதலமைச்சராக அறிவிக்குமாறு சிவசேனா கட்சி எம்.எல்.ஏக்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

முன் அனுபவம் இல்லாத ஒருவரை முதலமைச்சர் பதவியில் அமர்த்த யோசிக்கும் பாஜக, அதன் முடிவை ஏற்கனவே பல முறை கூறிவிட்ட நிலையிலும், பத்திரிக்கையாளர்களை சந்தித்த சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, "பாஜகவின் கருத்துக்களுக்கு நாங்கள் சம்மதம் தெரிவிக்கும் நிலையில், எங்கள் தரப்பு கருத்துக்களையும் அவர்கள் கேட்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

தீபாவளி பண்டிகையை தொடர்ந்து, வரும் 31அன்று இருகட்சிகளும் சந்திக்கவிருக்கின்ற நிலையில், பாஜக என்ன செய்யவிருக்கிறது என்பதே மகாராஷ்டிரா அரசியல் உலகின் தற்போதைய எதிர்பார்ப்பு.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP