சிவாஜி பூங்காவில் மகாராஷ்டிரா முதலமைச்சராக ஆதித்யா பதவியேற்பார் - ராகுல் கனல் !!!

மகாராஷ்டிரா மாநில தேர்தலில், வெற்றி கூட்டணிக்கு இடையேயான ஆட்சி அமைப்பது குறித்த சச்சரவுகள் தொடர்ந்து வரும் நிலையில், அம்மாநிலத்தின் முதலமைச்சராக சிவசேனா கட்சியை சேர்ந்த ஆதித்யா தாக்கரே பதிவியேற்பார் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஆதித்யாவின் நண்பரான ராகுல் என் கனல்.
 | 

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில், முதல் முறையாக தேர்தல் களத்தை சந்தித்த சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான சுரேஷுக்கு எதிராக வார்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளதை தொடர்ந்து, அக்கட்சியின் உறுப்பினர்கள் பலரும் அவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்குமாறு குரல் எழுப்பி வந்தனர். 

இதனிடையில், சிவசேனாவின் கூட்டணி கட்சியான பாஜக, கடந்த தேர்தலில் முதலமைச்சராக பதிவி வகித்த தேவேந்திர பட்னாவிஸ்-ன் பெயரை பரிந்துறை செய்தது. இதனால், கூட்டணி கட்சிகளான இருவருக்குமிடையே பலத்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. 

மகாராஷ்டிரா மாநில தற்போதைய ஆட்சி நாளையுடன் முடிவடையவுள்ளதை தொடர்ந்து, இது வரை இரு கட்சிகளும் ஓர் தீர்மானத்திற்கு வராத நிலையில், சிவசேனா கட்சியின் வளர்ச்சிக்காகவும், மகாராஷ்டிரா மக்களின் மேம்பாட்டிற்காகவும் அயராது பாடுபட்ட பால் தாக்கரேவின் பேரன் ஆதித்யா தாக்கரே, சிவாஜி பூங்காவில் விரைவில் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக பதவியேற்று, அவரது தாத்தா மற்றும் தந்தையின் கனவை நிறைவேற்றுவார் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஆதித்யா தாக்கரேவின் நம்பிக்கைக்குரிய நெருங்கிய நண்பரான ராகுல் என் கனல்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP