பெண்ணின் அந்தரங்க பகுதியில் ஆசிட் வீச்சு.. கள்ளக்காதலனின் கொடுஞ்செயல்

பெண்ணின் அந்தரங்க பகுதியில் ஆசிட் வீச்சு.. கள்ளக்காதலனின் கொடுஞ்செயல்
 | 

திருமணத்திற்கு மறுத்த காதலி! காதலன் செய்த கொடூரமான வேலை!!

கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தில் 42 வயதான ஆட்டோ ஓட்டுநர் மஞ்சுநாத் கலசாடா ஒரு பெண்ணுடன் இரண்டு ஆண்டுகளாக ஒன்றாக பழகி வந்துள்ளார். ஆனால் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் அந்த பெண் மஞ்சுநாத்துடனான தொடர்பை துண்டித்தார். இதனால் கோபம் அடைந்த அவர் தனியாக சந்திக்க வேண்டும் என அந்தப் பெண்ணை,  ஹவேரி டவுனின் புறநகரில் அமைந்துள்ள சித்தானா குடா என்ற மலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மஞ்சுநாத் பாட்டிலில்  ஆசிட் மறைத்து எடுத்து கொண்டு சென்றுள்ளார். அப்போது அவர் அந்த பெண்ணிடம் , நீ வேறு யாரையாவது விரும்புகிறாயா  என்று மஞ்சுநாத் அவளிடம் கேள்வி எழுப்பினான். 

திருமணத்திற்கு மறுத்த காதலி! காதலன் செய்த கொடூரமான வேலை!!

பின்னர் மஞ்சுநாத் அந்த பெண்ணை தலையில் தாக்கி, சுடிதாரின் ஷால் மூலம் கையை கட்டியுள்ளார். அப்போது அப்பெண் கூச்சலிட்டப் போது வாயையையும் கட்டி விட்டு வலுக்கட்டாயமாக அந்தப் பெண்ணின் ஆடைகளைக் களைத்துள்ளார். பின்னர் தான் கொண்டுவந்திருந்த ஆசிட்டை அப்பெண்ணின் பிறப்புறுப்புகளில் ஊற்றியதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இதில் அவரது கால்களிலும், உடற்பகுதியிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே சத்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதி விவசாயிகள் மஞ்சுநாத் செயலை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

திருமணத்திற்கு மறுத்த காதலி! காதலன் செய்த கொடூரமான வேலை!!

பின்னர் அவரை கடுமையாக தாக்கி அங்கிருந்த மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். தகவல் அடிப்படையில் அங்கு வந்த காவல் துறையினர் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மஞ்சுநாத்தை கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மஞ்சுநாத் குற்றத்தை ஒப்புக் கொண்டு மேற்கண்ட தகவலை வாக்கு மூலமாக அளித்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆசிட் வீச்சில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP