பாகிஸ்தானுக்கு ஓர் அன்பான எச்சரிக்கை - ராஜ்நாத் சிங்

ஹரியானா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், எண்ணங்களை மாற்றினாலே முன்னேற முடியும் என பாகிஸ்தானிற்கு அன்பான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 | 

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில், வரும் அக்டோபர் 21 ஆம் தேதியன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இரு பெரும் கட்சிகளான, பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியும், அம்மாநிலங்களில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. 

ஹரியானா மாநில தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில், பாகிஸ்தானுக்கு ஒர் அன்பான எச்சரிக்கையை நான் முன் வைக்க விரும்புகிறேன். நமது எண்ணங்கள் மாற்றப்படாமல், முன்னேற்றங்களை அடைய முடியாது. அது போல, அவர்களது எண்ணங்களை மாற்றவில்லையெனில், இன்று இரு பகுதியாக பிரிந்து நிற்கும் பாகிஸ்தான், நாளை பல பகுதிகளாக பிரிந்து நிற்க வேண்டிய நிலை வரும்" என்று அன்பான எச்சரிக்கை விடுத்துள்ளார் ராஜ்நாத் சிங்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP