தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்: மத்திய அரசு ஒப்புதல் 

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
 | 

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்: மத்திய அரசு ஒப்புதல் 

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகரில் மருத்துவக்கல்லூரிகள் அமைகின்றன. 6 புதிய மருத்துவக் கல்லூரிகளை தலா ரூ.325 கோடியில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு தலா ரூ.195 கோடியும், மாநில அரசு தலா ரூ.130 கோடியும் வழங்கும்.

6 புதிய மருத்துவக் கல்லூரிகளால் தமிழகத்திற்கு கூடுதலாக 900 எம்பிபிஎஸ் சீட்கள் கிடைக்கும். 900 இடங்களில் 85% தமிழக மாணவர்களுக்கு 15% பிற மாநிலத்தவருக்கும் வழங்கப்படும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP