5 வருட முதலமைச்சர் வாழ்க்கை எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளது - பட்னாவிஸ் உறுக்கம்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரங்களுக்கான நாள் இன்றுடன் முடிவடைந்தை தொடர்ந்து, 5 வருட முதலமைச்சர் வாழ்க்கை தனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளதாக கூறியுள்ளார் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்.
 | 

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் வரும் அக்டோபர் 21 அன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கான நாள் இன்றுடன் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில், பத்திரிக்கையாளர்களை சந்தித்த மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், "நமது வாழ்வில் நாம் மேற்கொள்ளும் பிரச்சனைகள் தான் நமக்கு நிறைய கற்றுக்கொடுக்கின்றன. எதிர்பாராத திருப்பங்கள் தான் சுவாரஸ்யங்கள் நிறைந்தவையாக இருக்கும். அதுபோல தான் அரசியல் வாழ்க்கையும். நாளை செய்ய வேண்டிய பணிகளாக நாம் ஒரு பட்டியல் வைத்திருந்தால், ஒவ்வொரு காலையும் நமக்கு வேறு விதமான பணிகளுடன் காத்திருக்கும்". என்று கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா-சிவசேனா கட்சிகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடு குறித்த கேள்விகளுக்கு, தனி கட்சியாக தொடங்கிய கட்சிகள் தான் பாஜக மற்றும் சிவசேனா. இரண்டு கட்சிகளுக்கும் பதவியில் அமர வேண்டும் என்ற எண்ணம் நிச்சயமாக இருக்கும். கருத்து வேறுபாடுகளும் நிறைய இருக்கும். அதற்காக கூட்டணியில் விரிசல் ஏற்படும் அளவிற்கு அதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார்.

"இந்த ஐந்து வருட அரசியல் வாழ்க்கையில், நான் கற்றுக்கொண்டது பொறுமை என்னும் மிக முக்கியமான ஒன்றை தான்" என்று உறுக்கமாக கூறினார் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP