48,000 ஊழியர்கள் டிஸ்மிஸ்: முதலமைச்சர் அதிரடி

தெலங்கானா மாநிலத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து ஊழியர்கள் 48,000 பேரை டிஸ்மிஸ் செய்து அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
 | 

ஆந்திராவை போல போக்குவரத்து கழகத்தை மாநில அரசுடன் இணைத்து அரசு ஊழியராக்க கோரி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். சனிக்கிழமை ஊழியர்கள் பணிக்குத் திரும்பவில்லை எனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

48,000 ஊழியர்கள் டிஸ்மிஸ்: முதலமைச்சர் அதிரடி

இந்த நிலையில், போக்குவரத்து கழகத்தை மாநில அரசுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து ஊழியர்கள் 48,000 பேரை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

மேலும், அரசின் அறிவிப்புக்கு பின்னரும் பணிக்கு வராதவர்கள் வேலை இழந்ததாக கருதப்படுவார்கள் என்றும், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் பணியிடங்களுக்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்கும் எனவும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP