கர்நாடகா: 17 அமைச்சர்கள் பதவியேற்பு!

கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அரசின் புதிய அமைச்சர்கள் 17 பேர் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
 | 

கர்நாடகா: 17 அமைச்சர்கள் பதவியேற்பு!

கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அரசின் புதிய அமைச்சர்கள் 17 பேர் இன்று பதவியேற்றுக்கொண்டனர். 

கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில்,17 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து, பாஜக பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சியமைத்தது. கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி எடியூரப்பா கர்நாடகா முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். 

இதை தொடர்ந்து இன்று, கர்நாடக அமைச்சரவை உறுப்பினர்கள் 17 பேர் பதவியேற்றுக்கொண்டனர். முதலமைச்சர் எடியூரப்பா முன்னிலையில் ஆளுநர் வஜூபாய்வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஈஸ்வரப்பா, அஷ்வந்த் நாராயணன், ஜெகதீஷ் ஷட்டர், பசவராஜ் பொம்மை, சோமண்ணா, ஸ்ரீராமலு மற்றும் எடியூரப்பா அரசுக்கு ஆதரவு தெரிவித்த சுயேட்சை எம்.எல்.ஏ நாகேஷ்  உள்பட 17 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP