வைல்ட் லைஃப் இந்தியா: பனி சிறுத்தைகள் எங்க இருக்கு தெரியுமா?

1984-ல் உருவான இந்த பார்க் சமீபத்தில் தான் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இதன் மொத்தப் பரப்பளவு 1171 சதுர கி.மீ. ஹிமாச்சலப் பிரதேசம், குலு நகரத்தில் அமைந்துள்ள இந்தப் பூங்கா, கடல் மட்டத்திலிருந்து 1500 முதல் 1600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
 | 

வைல்ட் லைஃப் இந்தியா: பனி சிறுத்தைகள் எங்க இருக்கு தெரியுமா?

வைல்ட் லைஃப் இந்தியா: பனி சிறுத்தைகள் எங்க இருக்கு தெரியுமா?


தி கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க் 

1984-ல் உருவான இந்த பார்க் சமீபத்தில் தான் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இதன் மொத்தப் பரப்பளவு 1171 சதுர கி.மீ. ஹிமாச்சலப் பிரதேசம், குலு நகரத்தில் அமைந்துள்ள இந்தப் பூங்கா, கடல் மட்டத்திலிருந்து 1500 முதல் 1600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு 375-க்கும் அதிகமான விலங்கினங்கள் காணப்படுகின்றன. அதில் 31 பாலூட்டிகள், 181 பறவை இனங்களும் அடங்கும். இங்கு பயோ டைவர்சிட்டி பாதுகாக்கப் படுவதால், மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகமும், இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிலையமும் இந்தப் பூங்காவை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க முயற்சிகள் எடுத்து வருகிறார்கள். 

எப்படி செல்வது? 

சென்னையிலிருந்து தர்மசாலாவுக்கு நிறைய ஃப்ளைட்டுகள் இருக்கின்றன. இங்கிருந்து கிளம்பி டெல்லியில் தாமதித்துவிட்டு பிறகு தர்மசாலா செல்வதால் பயண நேரம் குறைந்தது 8.30 மணி நேரம் ஆகிறது. பயணக் கட்டணம் ஒருவருக்கு சராசரியாக 12000 ரூபாய். சென்னையிலிருந்து நேரடியாக செல்லும் டிரெயின்கள் இல்லை, டெல்லி சென்று அங்கிருந்து குலு செல்லலாம். தர்மசாலாவிலிருந்து  சாலை மார்க்கமாக குலு செல்ல 5-6 மணி நேரமாகும்.  

வைல்ட் லைஃப் இந்தியா: பனி சிறுத்தைகள் எங்க இருக்கு தெரியுமா?

என்ன செய்யலாம்?

மேகத்தின் நடுவே நடந்து சுத்தமான காற்றை சுவாசிக்கலாம். அங்கிருக்கும் காடுகளில் தகுந்த வழிக்காட்டுதலோடு டிரெக்கிங் செல்லலாம். 

என்னவெல்லாம் பார்க்கலாம்?

பனி சிறுத்தைகள், கஸ்தூரி மான், பெரிய விலங்குகள், ஹிமாலயாவில் மட்டும் காணப்படும் வைப்பர் பாம்புகள் மற்றும் பல.

பார்வை நேரம்?

இந்தப் பூங்கா வருடம் முழுவதும் திறந்திருக்கும், இந்தியர்களுக்கு 50 ரூபாயும், வெளிநாட்டுக்காரர்களுக்கு 200 ரூபாயும் நுழைவுக் கட்டணமாகப் பெறப்படுகிறது. 

எங்கு தங்குவது? 

பல பேர் தங்கும் வசதியுடன் கூடிய ஃபாரஸ்ட் ஹவுஸ் இங்கு உள்ளது. 

பக்கத்தில் இருக்கும் மற்ற இடங்கள்?

திர்தன் பள்ளத்தாக்கு, திர்தன் அட்வெஞ்சர்ஸ், சேஹ்னி கோதி ஆகிய இடங்களும் இந்த பார்க்கிற்கு அருகில் உள்ளன. 


newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP