வங்காள புலியைப் பார்க்கனுமா, பந்தாவ்கர் தேசியப் பூங்கா போங்க

இது மத்தியப் பிரதேச மாநிலம் உமாரியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. 105 சதுர கி.மீ பரப்பளவில் 1968-ம் ஆண்டு தேசிய பூங்காவாக அமைக்கப் பட்டது. பந்தாவ்கர் எனும் சமஸ்கிருத சொல்லுக்கு 'சகோதரர்களின் கோட்டை' என்பது பொருள்.
 | 

வங்காள புலியைப் பார்க்கனுமா, பந்தாவ்கர் தேசியப் பூங்கா போங்க

வங்காள புலியைப் பார்க்கனுமா, பந்தாவ்கர் தேசியப் பூங்கா போங்க

பந்தாவ்கர் தேசியப் பூங்கா

இது மத்தியப் பிரதேச மாநிலம் உமாரியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. 105 சதுர கி.மீ பரப்பளவில் 1968-ம் ஆண்டு தேசிய பூங்காவாக அமைக்கப் பட்டது. பந்தாவ்கர் எனும் சமஸ்கிருத சொல்லுக்கு 'சகோதரர்களின் கோட்டை' என்பது பொருள். இந்துக் கடவுள்களான ராமனும், லக்ஷ்மனனும் இங்கிருந்து இலங்கையைப் பார்ப்பதாக மக்களுக்கு ஓர் ஐதீகம். 

எப்படி செல்வது? 

மற்ற இடங்களைப் போல் இங்கு செல்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. காரணம் இங்கு ஏர்போர்ட் வசதிகள் எதுவுமில்லை. அதனால் சென்னையிலிருந்து போபால் சென்று அங்கிருந்து 9 மணிநேரம் சாலை வழியாக பயணிக்க வேண்டும். சென்னையிலிருந்து செல்லும் போது டெல்லியில் ஃப்ளைட் நிறுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்படும், அதனால் இங்கிருந்து போபால் செல்ல குறைந்தது 8.30 மணியிலிருந்து 14 மணி நேரம் வரை ஆகும். டிக்கெட் ஒருவருக்குக் குறைந்தது பத்தாயிரம் ரூபாய். 

வங்காள புலியைப் பார்க்கனுமா, பந்தாவ்கர் தேசியப் பூங்கா போங்க

என்ன செய்யலாம்?

பறவைகளின் பாஷைகளைக் கேட்டுக் கொண்டு, ஜீப்பில் ஒரு ரெய்டு போகலாம்.கஜிராஹோ சிற்பங்கள், பந்தாவ்கர் கோட்டை ஆகியவைகளும் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய இடங்கள். 

என்னவெல்லாம் பார்க்கலாம்?

வங்காள புலி, யானை, மான், பல்லுயிரிகள் மற்றும் அதிகளவு பறவைகள். 

பார்வை நேரம்?

அக்டோபர் 15 முதல் ஜூன் 30 வரை ஒவ்வொரு வருடமும் இந்தப் பூங்கா செயல்படும். ஜீப்பில் செல்லும் 6 இந்தியர்களுக்கு 2000 ரூபாயும், 6 வெளிநாட்டுக்காரர்களுக்கு 4000 ரூபாயும் கட்டணமாக பெறப்படுகிறது. 

எங்கு தங்குவது? 

பண்டெலா ஜங்கிள் லாட்ஜ், கிங்ஸ் லாட்ஜ், நேச்சர் ஹெரிடேஜ் ரிசார்ட், டைகர் லகூன் ரிசார்ட் என பல தங்கும் விடுதிகள் உள்ளன. 

பக்கத்தில் இருக்கும் மற்ற இடங்கள்?

பகெல் மியூஸியம், மஹாமன் பாண்ட், த்ரீ கேவ் பாயிண்ட், செஷ்பூர் வாட்டர் ஃபால் இப்படி பல இடங்கள் பந்தாவ்கர் தேசியப் பூங்காவைச் சுற்றி உள்ளன. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP