புலிகள் அதிகம் இருக்கும் ரந்தம்போர் பூங்கா...

ஆரம்பிச்சாச்சு சம்மர் எங்க ஊர் சுத்தப் போகலாம்ங்கறது தான் பெரும்பாலான வீடுகள்ல இப்போ போய்ட்டு இருக்க டாபிக். நகரம், வாகன சத்தம், பொல்யூஷன் இப்படி நிறைய விஷயங்களை தினம் தினம் பாத்து, அலுத்துப் போனவங்களுக்கு அமைதி ஒரு வரப் பிரசாதம். ஆனா அது எங்கக் கிடைக்கும்? கண்டிப்பா டூர்ல தான். புது பயணங்கள், மனிதர்கள், சூழல்கள் நிச்சயமா ஒரு புதுவித அனுபவத்தையும் அமைதியையும் தரும்.
 | 

புலிகள் அதிகம் இருக்கும் ரந்தம்போர் பூங்கா...

புலிகள் அதிகம் இருக்கும் ரந்தம்போர் பூங்கா...

ஆரம்பிச்சாச்சு சம்மர் எங்க ஊர் சுத்தப் போகலாம்ங்கறது தான் பெரும்பாலான வீடுகள்ல இப்போ போய்ட்டு இருக்க டாபிக். நகரம், வாகன சத்தம், பொல்யூஷன் இப்படி நிறைய விஷயங்களை தினம் தினம் பாத்து, அலுத்துப் போனவங்களுக்கு அமைதி ஒரு வரப் பிரசாதம். ஆனா அது எங்கக் கிடைக்கும்? கண்டிப்பா டூர்ல தான். புது பயணங்கள், மனிதர்கள், சூழல்கள் நிச்சயமா ஒரு புதுவித அனுபவத்தையும் அமைதியையும் தரும். பயணங்கள் நமக்குள் நிறைய மாற்றத்தைத் தரும்! சந்தோசத்தைக் கொண்டாட, சோகத்தை மறக்க, என அதன் பட்டியல் தொடரும்! அப்படி பயணப் படும்போது வட இந்தியாவில் நீங்க மிஸ் பண்ணக் கூடாத சில 'வைல்ட் லைஃப்' இடங்களைப் பற்றிப் பார்ப்போம்.  

ரந்தம்போர் தேசியப் பூங்கா

இது வட இந்தியாவிலுள்ள நான்காவது பெரிய தேசிய பூங்கா. மொத்தம் 392 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டது. இந்தப் பூங்கா ராஜஸ்தான் மாநிலத்தில் சவாய் மாதோபூர் நகரத்தின் அருகில் அமைந்துள்ளது.  1973 ஆம் ஆண்டு புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் (Project Tiger) கீழ் கொண்டுவரப்பட்டது. பின்னர் 1980-ல் பூங்கா தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது. 

புலிகள் அதிகம் இருக்கும் ரந்தம்போர் பூங்கா...

எப்படி செல்வது ?

ஜெய்பூரிலிருந்து 3 மணி நேர பயணத்தில் இந்தப் பூங்காவை அடைந்து விடலாம். சென்னையிலிருந்து ஃபிளைட்டில் ஜெய்பூர் வரை செல்லலாம், குறைந்தப் பட்சம் 3 மணி நேரம் (ஃபிளைட்டைப் பொறுத்து) ஆகிறது. கட்டணமும் ஃபிளைட்டிற்கேற்றபடி சராசரியாக ஒருவருக்கு 5000 ரூபாய் ஆகும். டிரெயினில் 36 மணி நேர பயணம், கோயம்புத்தூரிலிருந்து ஜெய்ப்பூருக்கு வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மாலை 5.40க்கு டிரெயின் இயக்கப் படுகிறது. சென்னையிலிருந்து நான் - ஏசி ஸ்லீப்பரில் 780 ரூபாய். 

என்ன செய்யலாம்?

ரந்தம்போர் கோட்டையின் டாப்பிலிருந்து இயற்கையைப் பார்க்கவே உங்களுக்கு இரண்டு கண்கள் பத்தாது. 

என்னவெல்லாம் பார்க்கலாம்? 

புலிகள், சிறுத்தை, கழுதை புலி, காட்டுப் பூனை, இந்திய நரி அதோடு நீர்ப்பறவை, ஐபிஸ், ஃபிளமிங்கோ, பச்சைக்கிளி போன்ற பெருமளவு பறவை இனங்கள். 

புலிகள் அதிகம் இருக்கும் ரந்தம்போர் பூங்கா...

பார்வை நேரம்?

அக்டோபர் முதல் ஜூன் வரை இந்தப் பூங்கா திறந்திருக்கும். மற்ற மாதங்கள் பார்க் மூடியிருக்கும். காலை 6.30 மணி முதல் 10.00 மணி வரையும், மாலை 2.30 மணி முதல் 6.00 மணி வரையும் பூங்கா செயல்படும். இந்திய கேண்டர் வாகனங்களுக்கு 75 ரூபாயும், இந்திய ஜிப்ஸி வண்டிகளுக்கு 131 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப் படுகிறது. இதன் முறையே ரூ.475, ரூ. 530 என வெளிநாட்டுப் பயணிகளுக்கு வசூலிக்கப் படுகிறது. 

எங்கு தங்குவது? 

தாஜ் சவாய், ட்ரீ ஹவுஸ் அனுராகா, தி டைகர் வில்லா, டைகர் மூன் என பல ரிசாட்டுகள் பூங்காவுக்கு அருகில் இருக்கின்றன. 

அட்வெஞ்சர்ஸ்?

ஹாட் ஏர் பலூன் பயணம் உங்களுக்கு ஒரு த்ரில் அனுபவத்தைத் தரும்.  

பக்கத்தில் இருக்கும் மற்ற இடங்கள்? 

ரந்தம்போர் கோட்டை, த்ரினேட்ரா கணேஷா கோயில், சர்வல் லேக், படம் லேக், ஜோகி மஹால் இப்படி இந்தப் பூங்காவிற்கு அருகில் மற்ற சில பார்க்க வேண்டிய இடங்களும் உள்ளன. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP