18 ஆண்டுகளாக கடலில் மிதந்து வந்த உலகின் மிகப்பெரிய பனி மலை!!

கடந்த 18 ஆண்டுகளாக கடலில் மிதந்து வந்த உலகின் மிகப்பெரிய பனி மலை விரைவில் மொத்தமாக காணாமல்போய்விடும் என்று நாசா தெரிவித்துள்ளது.
 | 

18 ஆண்டுகளாக கடலில் மிதந்து வந்த உலகின் மிகப்பெரிய பனி மலை!!

கடந்த 18 ஆண்டுகளாக கடலில் மிதந்து வந்த உலகின் மிகப்பெரிய பனி மலை விரைவில் மொத்தமாக காணாமல்போய்விடும் என்று நாசா தெரிவித்துள்ளது.

உலகின் 5-வது கண்டமாக உள்ள அன்டார்டிகா கண்டம்  முழுவதும் பனிமலைகளால் ஆனது. தற்போது நிலவி வரும் தட்பவெப்ப நிலை மாற்றத்தால், எதிர்பாரா இயற்கை சீற்றங்கள் நடக்கின்றன. இதனை தொடர்ந்து  பூமியானது மிகவும் வெப்பமடைந்து  அன்டார்டிகாவில் உள்ள பனிமலைகள் உருகி வருகின்றன. இதனால் கடல் நீரின் உயரம் உயர்ந்து வருகிறது. சில சமயங்களில் இந்த  பனிக்கட்டிகள் உடைந்து பிரிந்து விடுகின்றன.

கடந்த 2000-ம் ஆண்டு மார்ச் மாதம் அன்டார்டிகா கண்டத்தில்  இருந்து  பெரிய மலை அளவுக்கு பனிக்கட்டி உடைந்து பிரிந்தது. இதன் நீளம் 296 கி.மீ., அகலம் 37 கி.மீட்டர். உலகின் மிகப்பெரிய பனிமலை இது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  பி-15 என்று பெயரிடப்பட்ட இந்த பனி மலையானது, கடலில் மிதந்து செல்ல தொடங்கியது. இந்நிலையில் சிறு சிறு துண்டுகளாக உடையப்  பட்ட இந்த பனிமலையின் 4 துண்டுகள் மட்டும் கடலில் மிதந்து கொண்டுள்ளன. 

இதனை சர்வதேச விண் வெளி ஆய்வு நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) உள்ள விண்வெளி வீரர்கள் கடந்த மாதம்(மே)  22-ம் தேதி படம் எடுத்தனர். அப்போது அந்த பனிக்கட்டி 18 கி.மீ. நீளமும், 9 கி.மீ. அகலமும் இருந்தது.
 
இது குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கூறும்போது, ‘‘பி-15இசட் பனிக்கட்டி கண்காணிக்கும் அளவுக்கு இன்னும் பெரிய உருவத்தில்தான் இருக்கிறது. ஆனால் அது மேலும் பல துண்டுகளாக உடைந்தால் அல்லது உருகி அளவு சிறிதானால் தொடர்ந்து கண்காணிக்க முடியாது. இப்போது பனிமலையின் நடுவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. முனைகளும் சிறு சிறு துண்டுகளாகி வருகின்றன’’ என்று தெரிவித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP