உலக தலைவர்களுக்கு தெரிந்தது உள்ளூர் அப்பாடக்கர்களுக்கு புரியவில்லையே!

நம் நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்களின் எண்ண ஓட்டம் எப்படி உள்ளது என்பதை, நம் நாட்டு எதிர்க்கட்சி தலைவர்களை விட, ரஷ்ய அதிபர் புடின் நன்கு புரிந்து வைத்துள்ளார். மோடி தான் மீண்டும் இந்தியாவின் பிரதமர் ஆகப்போகிறார் என்பதை, அவர் அப்போதே உணர்ந்திருந்தார். எனவே தான் அப்படி ஒரு அழைப்பை அவரால் விடுக்க முடிந்தது.
 | 

உலக தலைவர்களுக்கு தெரிந்தது உள்ளூர் அப்பாடக்கர்களுக்கு புரியவில்லையே!

கடந்த ஆண்டு அக்டோபரில், (அதாவது 2018ம் ஆண்டு)  இந்தியாவிற்கு வருகை தந்த ரஷ்ய அதிபர் புடின், 'அடுத்த ஆண்டு செப்டம்பரில்  எங்கள் நாட்டில் நடைபெறும் உச்சிமாநாட்டிற்கு, இந்திய பிரதமர் என்ற முறையில் வருகை தாருங்கள்' என, பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார். 

என்னடா இது, (அடுத்த ஆண்டு) 2019 மே மாதம்  தேர்தல் நடந்து முடிந்த பிறகுதானே அடுத்த பிரதமர் யார் என தெரியும். பாவம், விவிரம் புரியாமல் உளறுகிறார் புடின் என, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் கிண்டல் அடித்தனர். 

ஆனால், மக்கள் மனங்களை புரிந்து கொண்டவர் மட்டுமே ஆட்சி கட்டிலில் அமர முடியும் என்பதை நிஜமாக்கும் வகையில், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, மத்தியில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. 

நம் நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்களின் எண்ண ஓட்டம் எப்படி உள்ளது என்பதை, நம் நாட்டு எதிர்க்கட்சி தலைவர்களை விட, ரஷ்ய அதிபர் புடின் நன்கு புரிந்து வைத்துள்ளார். மோடி தான் மீண்டும் இந்தியாவின் பிரதமர் ஆகப்போகிறார் என்பதை, அவர் அப்போதே உணர்ந்திருந்தார். எனவே தான் அப்படி ஒரு அழைப்பை அவரால் விடுக்க முடிந்தது. 

அவர் வாக்கு பலித்தது போல, தற்போது ரஷ்யாவில் நடைபெறும் உச்சி மாநாட்டில், நம் நாட்டு பிரதமர் என்ற முறையில், நரேந்திர மோடியே பங்கேற்றுள்ளார். வெளி நாட்டு தலைவர் ஒருவருக்கு தெரிந்தது கூட, நம் நாட்டு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு தெரியவில்லையே. மக்களின் மன ஓட்டத்தை புரிந்துகொண்டால் மட்டுமே, அவர்களுக்கு மன்னன் ஆக முடியும் என்பதை இனியாவது அவர்கள் புரிந்த கொண்டால் நன்று.

கடந்த ஆண்டு ரஷ்ய அதிபர், பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்த செய்தியை நாம் அப்போதே பதிவு செய்திருந்தோம். அதன் லிங்க் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. எரியும் நெருப்பில் நெய் வார்த்த புடின்!

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP