பிரசவத்திற்கு சைக்கிளில் சென்ற பெண் அமைச்சர்!

வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் அவர் சைக்கிளிலே பயணம் செய்துள்ளார். அப்போது பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்கிறேன் என கூலாக ஒரு செல்பி எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜென்டரின் தைரியத்தை பல பெண்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
 | 

பிரசவத்திற்கு சைக்கிளில் சென்ற பெண் அமைச்சர்!

நியூசிலாந்தில் பெண் அமைச்சர் தனது பிரசவத்திற்கு தானே சைக்கிளில் மருத்துவமனைக்கு வந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நியூலாந்து நாட்டில் இணை போக்குவரத்து போக்குவரத்து அமைச்சராக இருப்பவர் ஜூலி அன்னே ஜென்டர்(38). முதல் குழந்தையை பெற்றெடுப்பதற்காக, பிரசவகால விடுமுறையில் இருந்துள்ளார். பிரசவத்திற்கான தேதி வந்தவுடன் மருத்துவமனையில் சேர்வதற்கு வீட்டில் இருந்து ஆக்லாந்து என்னுமிடத்திற்கு சைக்கிளில் சென்றுள்ளார்.  வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் அவர் சைக்கிளிலே பயணம் செய்துள்ளார். அப்போது பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்கிறேன் என கூலாக ஒரு செல்பி எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜென்டரின் தைரியத்தை பல பெண்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். 

இந்தியாவில் பிரசவ வலியால் துடித்துக்கொண்டு பிரசவத்திற்காக காரில் செல்லும் பெண்கள் மத்தியில், கூலாகவும், தைரியமாகவும் சைக்கிளில் பிரசவத்திற்காக சென்றது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP