திருட வந்தவனை ஏமாற்றிய பெண்மணி : வைரலாகும் நியூ ட்ரெண்ட்  வீடியோ!

திருடன் வேகமாக கைப்பையை எடுக்கச் செல்ல. அந்த பெண்ணோ திருடனின் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றுவிடுகிறார். இந்த நகைப்புக்குரிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
 | 

திருட வந்தவனை ஏமாற்றிய பெண்மணி : வைரலாகும் நியூ ட்ரெண்ட்  வீடியோ!

தனியா நடந்து செல்லும் பெண்களிடம் செயின், கைபேசி, கைப்பை உள்ளிட்டவை இருசக்கர வாகனங்களில் வரும் கொள்ளையர்களால் பறிக்கப்படுவதும், தடுக்க முற்படும் பெண்கள் பலத்த காயம் படுவதும் தினந்தோறும் நடைபெறக்கூடிய வாடிக்கையான நிகழ்வாகி விட்டது. 

இந்நிலையில் இணையதளத்தில் ஒரு வீடியோ வெகு வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சாலையில் ஒரு பெண் தனியாக நடந்து செல்கிறார். அதனை கவனிக்கும் ஒரு இளைஞன் தான் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த பெண்ணை தாக்கி கைப்பையை பறிக்க முற்படுகிறார். அப்போது அந்த பெண் தன்னுடைய கைப்பையை சாலையில் தூக்கி எறிகிறார். அதை கண்ட திருடன் வேகமாக கைப்பையை எடுக்கச்  செல்ல. அந்த பெண்ணோ திருடனின் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றுவிடுகிறார். இந்த நகைப்புக்குரிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP