இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதேன்யாஹூ ஆட்சியைக் கைப்பற்றுவாறா இன்று ?

இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதேன்யாஹூ ஆட்சியைக் கைப்பற்றுவாறா இன்று ? இஸ்ரேலின் தேர்தல் வரலாற்றில், முதன் முறையாக, ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக தேர்தல் நடக்கவுள்ளது
 | 

இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதேன்யாஹூ ஆட்சியைக் கைப்பற்றுவாறா இன்று ?

இஸ்ரேலின் தேர்தல் வரலாற்றில், முதன் முறையாக, ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக தேர்தல்  நடக்கவுள்ளது. 

செவ்வாயன்று (இன்று), இஸ்ரேல் நாட்டின் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, ஒரே ஆண்டில் இரண்டாவதாக தேர்தல் நடக்கவுள்ளது. ஏப்ரல் 9, 2019 ல் நடந்த தேர்தல், பெஞ்சமின் நெதேன்யாஹூ(69) மற்றும் பென்னி கண்ட்ஸ்(60) இருவருக்கும் இடையே நடந்ததை போல், செப் 17 இன்று நடைபெறும் இரண்டாவது தேர்தலிலும் இவ்விருவரும் தேர்தல் களத்தில் நேருக்குநேர் போட்டியிடும் நிலை நிலவுகிறது.

இஸ்ரேல் பாராளுமன்றமான நெசட்டில், இதுவரை எந்த ஒரு தனி கட்சியும் கூட்டணி அமைக்காமல் வெற்றி பெற்றிராத நிலை நிலவி வருகிறது. இஸ்ரேலின் பாதுகாப்பு துறை முன்னாள் அமைச்சர் அவிக்டார் லைவர்மென், பெஞ்சமின் நெதேன்யாஹூவிற்கு ஆதரவு அளித்திருந்தால் இன்று தேர்தல் நடைபெற்று இருக்காது. இருவருக்கும் முன்பு தொட்டே இருந்து வந்த கருத்து வேறுபாடுகளே நெதேன்யாஹூவிற்கு அவிக்டார் ஆதரவு அளிக்காததற்கு காரணமெனக் கூறப்படுகிறது.

பல லஞ்ச வழக்கு மோசடி குற்றச்சாட்டுகள் இருப்பினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யஅதிபர் விளாடிமிர் புடின், மற்றும் இந்திய பிரதமர்  நரேந்திர மோடி ஆகியவர்களுடனான நட்பு, இஸ்ரேலின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பதால் நெதேன்யாஹூ வெற்றி பெறலாம் என ஓர் கருத்து நிலவுகிறது, பென்னி கண்ட்ஸ் அவருடைய அரசியல் வாழ்வில் இதுவரை எந்த குற்றச்சாட்டுகளும் இன்றி  நேர்மையான தலைவராக திகழ்ந்து வருவதால் அவர் வெற்றிபெற வாய்ப்புள்ளதாகவும் கருத்து கணிப்புகள் வெளி வந்துள்ளன.

Newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP