கருப்புப் பட்டியலில் வைக்கப்படுமா பாகிஸ்தான்??

ப்ரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் வைத்து நடைபெறவிருக்கும் பொருளாதார நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பின் குழு சந்திப்பில், பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் சேர்ப்பது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
 | 

கருப்புப் பட்டியலில் வைக்கப்படுமா பாகிஸ்தான்??

ப்ரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் வைத்து நடைபெறவிருக்கும் பொருளாதார நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பின் குழு சந்திப்பில், பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் சேர்ப்பது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

முறைகேடான பணப்பரிமாற்றத்தை தடுப்பதற்காக, ஜ-7 நாடுகளினால், கடந்த 1989 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பு, 2001 ஆம் ஆண்டு முதல், தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை கண்காணிக்கும் பொறுப்பையும் பெற்றது. 

பொருளாதார நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பின் குழு சந்திப்பு, இன்று தொடங்கி, வரும் 18ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், அதில் பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் சேர்ப்பது குறித்த தீர்மானம் எடுக்கப்படும்  என்ற எதிர்ப்பார்ப்பு சர்வதேச நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.

சர்வதேச நிதியத்தின் கீழ் வரும் இந்த பொருளாதார நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பு, தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்து வருவதாகவும்,  முறைகேடான பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்ட பாகிஸ்தானை, இது குறித்து விளக்கம் கேட்டு, சந்தேகப்பட்டியலில் வைக்க உத்தரவு பிறப்பித்திருந்தது.

தீவிரவாதத்திற்கு நிதியுதவு செய்து வருவதையும், முறைகேடான பணப்பரிமாற்றத்திற்கு ஆதரவு அளிப்பதையும் நிறுத்திக்கொள்ளும்படி, பாகிஸ்தானிற்கு, ஏற்கனவே இரண்டு முறை எச்சரிக்கை விடுத்திருந்தது பொருளாதார நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பு. எனினும், பாகிஸ்தான் அதை செய்ய தவறியதால், தற்போது அதனை கருப்புப் பட்டியலில் சேர்ப்பது குறித்து ஆலோசனையில் அக்குழு ஈடுப்பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

இந்நிலையில், பொருளாதார நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பின் சந்திப்பு நடைபெறவிருப்பதை உணர்ந்த பாகிஸ்தானின் பயங்கரவாததிற்கு எதிரான அமைப்பு, மேல்பூசல் பூசும் வகையில், ஜமாத் உத் தவா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த சஃபர் இக்பால், யாஹ்யா அசிஸ், முஹமது அஷ்ரஃப் மற்றும் அப்துல் சலாம் ஆகிய நால்வரை தற்போது கைது செய்துள்ளது.

இதனிடையில், பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் வைக்கப்போவதாக, பொருளாதார நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பின் குழு சந்திப்பில் தீர்மானிக்கப்படுமாயின், பின் பாகிஸ்தான் சர்வதேச பொருளாதார வங்கிகள் எதிலிருந்தும் நிதியுதவிகள் பெற இயலாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பாகிஸ்தானிற்கு இது மிகவும் சிக்கலான ஒரு தருணமாகும்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP