ஹாங்காங் போராட்டங்களை நாங்களும் கண்காணித்து வருகிறோம் என ஏன் கூறவில்லை: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி!!!

நாளை சீன அதிபர் ஜீ ஜிங் பிங் இந்தியா வந்து இந்திய பிரதமருடன் பேச்சுவார்த்த மேற்கொள்ள உள்ள நிலையில் சீன அயலுறவுத்துறை அதிகாரி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அதற்கு இந்தியா ஏன் பதிலடி தரவில்லையென காங்கிரஸ் கட்சியின் மணிஷ் திவாரி கேள்வியெழுப்பியுள்ளார்.
 | 

ஹாங்காங் போராட்டங்களை நாங்களும் கண்காணித்து வருகிறோம் என ஏன் கூறவில்லை: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி!!!

நாளை சீன அதிபர் ஜீ ஜிங் பிங் இந்தியா வந்து இந்திய பிரதமருடன் பேச்சுவார்த்த மேற்கொள்ள உள்ள நிலையில் சீன அயலுறவுத்துறை அதிகாரி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அதற்கு இந்தியா ஏன் பதிலடி தரவில்லையென காங்கிரஸ் கட்சியின்  மணிஷ் திவாரி கேள்வியெழுப்பியுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் காஷ்மீர் விவகாரம் இருநாடுகளுக்கு இடையே உள்ள விவகாரம். அதை சம்பந்தபட்டவர்களே பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டும் என சீனா கூறியிருந்த நிலையில், காஷ்மீரில் நடைபெற்று வரும் மாற்றங்களை நாங்கள் கூர்ந்து கவனித்த வருகிறோம் என அந்நாட்டு அயலுறவுத்துறை அதிகாரி அறிவித்திருப்பது குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

சீனாவின், பீஜிங் நகருக்கு, மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம், "காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது மனிதர்கள் தலையிடுவதை விட, நீங்களாகவே இந்தியாவிடம் இது குறித்து கலந்துரையாடி, விரைவில் தீர்வு காண்பது நல்லது" என சீன அதிபர் ஜீ ஜின்பிங் கூறியிருந்தார். இந்நிலையில், அந்நாட்டு அயலுறவுத்துறை அதிகாரியான ஜெங் ஷீ வாங், "காஷ்மீரில் நடைபெற்று வரும் மாற்றங்களை நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சகம் இதற்கு ஒரு நல்ல தீர்வை கூற வேண்டும். நிலைமையை மோசமாக்கும் எந்த ஒரு செயலையும் சீனா விரும்பவில்லை" என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். 

இதை தொடர்ந்து,  ஜெங் ஷீ வாங்கின் இந்த பேச்சுக்கு, இந்தியா ஏன் பதிலடி தரவில்லையென காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மணிஷ் திவாரி கேள்வியெழுப்பியுள்ளார்.  "சீனாவின் ஹாங்காங்கில் ஜனநாயக சார்புக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்தோ, ஜின்ஜியாங் நகரில் உய்குர் இன மக்கள் ஒடுக்கப்படுவதை குறித்தோ, திபத்தில் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் குறித்தோ, ஏன் பிரதமர் கேள்வியெழுப்பவில்லை என அவர் தனது ட்விட்டர் பதிவின்  மூலம் கேள்வியெழுப்பியுள்ளார்.

 

 

மேலும், சில தினங்கள் முன்பு, கடந்த ஆண்டு நடைபெற்ற வுஹான் மாநாட்டை தொடர்ந்து, இந்தியா சீனா இரு நாடுகளும் நட்புறவோடு இருந்து வருவதாகவும், பல வர்த்தக ரீதியான ஒப்புதல்களில் கையெழுத்திட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று கொண்டிருப்பதாகவும், செங் ஷீ வாங் குறிப்பிட்டிருந்ததை தொடர்ந்து, தற்போது இவரது பேச்சு, தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP