இஸ்ரேலை அச்சுறுத்தி வந்த பாஹா அபு அல் அடா யார்??

அல்-குட்ஸ் படைப்பிரிவுகளில் ஒருவரும், பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் தலைவருமான பஹாத் அபு அல் அடா, முற்றுகையிடப்பட்ட கடலோர பகுதிகளில் தேடப்பட்டுவந்த மிக முக்கிய பயங்கரவாதிகளில் ஒருவராவார்.
 | 

இஸ்ரேலை அச்சுறுத்தி வந்த பாஹா அபு அல் அடா யார்??

அல்-குட்ஸ் படைப்பிரிவுகளில் ஒருவரும், பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் தலைவருமான பஹாத் அபு அல் அடா, முற்றுகையிடப்பட்ட கடலோர பகுதிகளில் தேடப்பட்டுவந்த மிக முக்கிய பயங்கரவாதிகளில் ஒருவராவார். 

காசா பகுதிகளில் ஹமாஸ் அமைப்பு தான் ஆட்சி செய்துக்கொண்டிருந்தது. ஆனால், சமீபத்திய காலங்களில் இந்த அமைப்பு சரிவை கண்டிருந்த நிலையில், அதனால் ஏற்பட்டிருந்த வெற்றிடத்தை நிரப்ப முயற்சித்தது பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிகாத் அமைப்பு. சன்னி இஸ்லாமியத்தை பின்பற்றும் இந்த அமைப்பின் தலைவர் தான் பஹாத் அபு அல் அடா.

ஈரான் நாட்டின் ஆதரவுடன் இஸ்ரேலில் பலவிதமான தாக்குதல்களில் ஈடுபட்டிருந்தது இவரின் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பு. ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத காரணத்தினால், பலவகையான ஆயுதங்கள் தயாரிப்பதிலும், ஏவுகணை தாக்குதல்கள் மேற்கொள்ளவதிலும் பயிற்சி பெற்று வந்தது இந்த அமைப்பு.

இதை தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் நாட்டில் மேற்கொள்ளபட்டிருந்த ஏவுகணை தாக்குதலில் மிக முக்கிய காரண கர்த்தாவாக கருதப்பட்ட அபு அல் அடா, அந்நாட்டில் அமைதியை நிலவ விடாது மிகபெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தார்.

இன்று இஸ்ரேலில் மேற்கொள்ளபட்டு வரும் அனைத்து தாக்குதல்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் காரணமாக இருந்துவரும் பாலஸ்தீனிய இஸ்லாமிய அமைப்பின் தலைவனான பாஹா அபு அல் அடாவுக்கு எதிராக தாக்குதல் மேற்கொள்ள தீர்மானித்த இஸ்ரேல் அரசு அதில் வெற்றி பெற்றும் இருக்கிறது. எனினும், அந்த வெற்றியை தொடர்ந்தும், இஸ்ரேலில் இந்த நிமிடம் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன பயங்கரவாத தாக்குதல்கள்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP