எதிரிகள் மீது தாக்குதல் தொடுப்போம்: காஸா குறித்து எங்கள் கொள்கையில்  மாற்றமே இல்லை: பெஞ்சமின் நேதன்யாஹூ!!!!

இஸ்ரேல் நாட்டில் 4 நாட்களாக தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டு வரும் காஸா பயங்கரவாதிகள் குறித்த தங்களது கொள்கையில் எந்த மாற்று கருத்தும் இல்லை எனவும், அவர்கள் மீது மறுதாக்குதலில் ஈடுபடுவது உறுதி எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார் அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ.
 | 

பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் தலைவரான பஹாத் அபு அல் அடாவின் மரணத்தை தொடர்ந்து, இஸ்ரேல் நாட்டில் கடந்த சில நாட்களாக ஏவுகணை தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர் பயங்கரவாதிகள். இதனால் இஸ்ரேலில் 50க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல்கள் அனைத்தும் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் தலைவரான பஹாத் அபு அல் அடாவின் மரணத்தை தொடர்ந்து ஏற்பட்டிருப்பதால், இது முழுக்க முழுக்க இஸ்ரேல் ராணுவத்தினருக்கும், இஸ்லாமிய அமைப்பிற்கும் இடையான போராட்டம் தான் என்று கூறப்படும் நிலையிலும், இந்த தாக்குதலுக்கு காரணம் ஹமாஸ் அமைப்பு தான் என்று கூறி வரும் இஸ்ரேல் அரசு ஜெட் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஹமாஸ் அமைப்பின் முகாம்களை தாக்கியதுடன், அதன் கடற்படை தளத்தையும் நேற்று தாக்கியுள்ளது. 

இதை தொடர்ந்து, தற்போது பத்திரிகையாளர்களை சந்தித்த அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ, ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதல்களினால் இங்கு அப்பாவி மக்கள் காயமடைந்துள்ளனர். எனவே, இதற்கு மேலும் இஸ்ரேல் அரசு அமைதிக்காக்க தயாராகயில்லை என்றும், இனி தங்கள் நாட்டின் மீது யார் தாக்குதலில் ஈடுபட்டாலும் அவர்களுக்கு பாடம் கற்பிக்கும் இஸ்ரேல் அரசு என்று கூறியுள்ளார்.

Newstm.in

#RamjanmabhoomiVerdict #SupremeCourt #SunniWaqfBoard #AsaduddinOwaisi #AllIndiaMuslimPersonalBoard

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP